அவிசுவாசம் தேவனை தடை செய்யாது Phoenix, Arizona, USA 62-0128M 1கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. “நாம் தேவனுடைய வீட்டிற்கு போவோம் என்று அவர்கள் நம்மிடத்தில் கூறினபோது, நான் மனமகிழ்ச்சியாயிருந்தேன்” என்று வார்த்தையில் இவ்விதமாக எழுதியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த அருமையான இடம், அருமையான சூழ்நிலை, அருமையான மேய்ப்பர் மற்றும் இந்த பாடற்குழு - உண்மையிலேயே இது ஒரு அருமையான சபையாயிருக்கிறது. நமக்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ அதில் எந்த ஒரு குறைச்சலையும் இந்தக் காலையில் நான் பார்க்கவில்லை. “தேவன் நமக்கு போதுமானவர்” என்ற அந்த பாடலை உண்மையிலேயே நான் மெச்சிக் கொள்கிறேன். அது அவ்வளவு அழகாக இல்லையா? மிகவும் அருமையாகப் பாடினார்கள்; மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட குரல்கள்; அதை நான் நேசிக்கிறேன். எந்த... பெற்றிராத, போலித்தனமில்லாத ஒரு அசலான காரியத்தை நான் நேசிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அருமையாகப் பாடுவதை நான் விரும்புவேன். ஆனால் அதிக மிகைமைப்படுத்திப் பாடுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று உங்களுக்குத் தெரியும். எப்படியெனில் அவர்களுடைய முகமே நீலமாகிற அளவுக்கு நிறுத்தாமல் பாடுவார்கள். மேலும் ஏதோ விதத்தில் வாயில் நீரைக் கொப்பளிக்கிற மாதிரியும், நடுங்கும் குரலோடு கீச்சொலி எழுப்பியும் மற்றும் வெவ்வேறு வகையாகப் பாடுவார்கள். பாடுவதாகவே அது இல்லை. இவ்விதமாகப் பாடுவதை, அந்த நல்ல பழம் பாணியிலான இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாகவே பெந்தகோஸ்தேயில் பாடுவதை நான் விரும்புவேன். 2சகோதரன் ஃப்ரெட் சாத்மன், நீங்கள் இங்கே எங்கோ இருக்கிறீர்கள்? (அவர் என்னுடைய தர்மகர்த்தாக்களில் ஒருவர்) இந்த இடத்தை சுற்றும் முற்றும் பாருங்கள். இந்த ஞாயிறுபள்ளி அறைகள் மற்றும் இங்கே பின்னால் இருக்கிற எல்லாவிதமான காரியங்களைப் போலவே அங்கே நான் வசிக்குமிடத்தில், நம்முடைய சபையில் கட்டப்படவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். அதை நான் விரும்புகிறேன். கொஞ்ச நேரத்திற்கு முன்பு வருகிற வழியில் இதை நான் கவனித்தேன். ஒரு புதிய சபையை கட்டும்படிக்கான செயலாக்கத்தில் நாம் இருக்கிறோம், இதை நான் விரும்புகிறேன். அந்த இருக்கைகள் மற்றும் தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கும் முறைமைகளை நான் நேசிக்கிறேன். அது அருமை. அதை நான் புகழ்ச்சிக்காக கூறவேண்டும் என்று கூறவில்லை. அதை நான் அவ்வளவாக நான் உண்மையைத்தான் கூறுகிறேன். அதை நான் நேசிக்கிறேன். அதை நான் அவ்வளவாக நேசிக்கிறேன். 3இங்குதான் நான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு காலதாமதமாக வந்திருக்கிறேன். நான் எப்பொழுதும் காலதாமதமாக வருகிறவன். ஆனால் இந்தக் காலையில் நான் இரண்டு காரியங்களைப் பற்றி அறிந்து கொண்டேன், அது... இப்படியாக இது இருக்கும் பட்சத்தில்... டென்னசியிலிருக்கும் கிளிவ்லேன்டின் தேவ சபைகளில் (churches of god) ஒன்று... உலகம் முழுவதும் இந்த மக்கள் எனக்கு ஒரு ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள். முதன் முதலாக நாங்கள் அறிமுகமாகிக் கொண்டபோது ஏற்பட்ட சந்திப்பை நான் நினைவு கூருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு இங்கிருக்கும் சகோதரன் கார்டன் லின்ட்ஸே அவர் அசெம்பிளிஸ்ஆப் காட் சபையுடன் ஐக்கியம் கொண்டிருப்பவர், அவர் என்னை சட்டங்காவுக்கு (Chattanooga) போகும்படிக்கு அனுப்பினார். அங்கே அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தப்போகிறார்கள் என்று அவர் கூறினார்; மற்றும் அவர்கள் ஒரு பெரிய அரங்கத்தை பெற்றிருந்தார்கள். எனவே அந்த சமயத்தில் என் சார்பாக பேசிக் கொண்டிருந்த, சகோதரன் பாக்ஸ்டரை, சட்டங்காவுக்கு அனுப்பினேன். அங்கிருந்து அவர் என்னை திரும்ப அழைத்தார். அவர், சகோதரன் பிரான்ஹாம், இங்கே நமக்கு ஆறாயிரத்து ஐநூறு பேரை உட்காரவைக்கக்கூடிய ஒரு அரங்கம் இருக்கிறது. அதின் முழு செலவையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சபையும் இங்கே இருக்கிறது; அது ஒரு கீழ்தளத்தில் நடத்தப்படும் ஒரு சிறு சபை; ஏறக்குறைய முப்பத்தைந்து அங்கத்தினர்களை மட்டும் கொண்டது“, என்றார். நான், ”அது பாராட்டத்தக்கது. எனவே, அது எல்லாமே அவர்களுடைய பங்களிப்பாக இருக்கிறது“, என்றேன். 4நான், “நல்லது, நாளை நான் அங்கிருப்பேன்”, என்றேன். எனவே நான் விமானத்தில் உடனடியாக அங்கு சென்றடைந்தேன். அடுத்த நாள் காலை லீ கல்லூரியில் பேசும்படியான சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. அங்கிருக்கும் பெரிய கல்லூரிகளில் அதுவும் ஒன்று; ஓ, அவர்களுடைய மாணவக்குழு எப்பேற்பட்ட ஒரு அருமையானது. அடுத்த நாள் இரவு கூட்டத்திற்கு அவர்கள் உள்ளே வந்தபோது, இடமில்லாததால் தெருவில் ஒதுங்கிச் செல்ல வேண்டியதாய் இருந்தது. அவர்கள் உட்காருவதற்கு எங்குமே இடம் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் என்னுடைய உதவியை நாடி வந்தார்கள். அந்த அரங்கத்தின் முழுச் செலவையும், ஒரு சின்னஞ் சிறிய சபை பொறுப்பு எடுத்துக்கொண்டது; மற்றும் அவர்களெல்லாரும் அங்கே கூடி வந்திருந்தார்கள், உண்மையிலேயே அங்கே எங்களுக்கு ஒரு மகிமையான நேரம் உண்டாயிருந்தது. அதுவே தேவசபையின் (Church of God) தலைமையகத்துடன் என்னுடைய நேரடி தொடர்பாயிருந்தது. தேவசபை, அந்தப் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. அந்த ஒரு பெயருக்காக அதை நான் நேசிக்கிறேன். மற்றும் அவர்களை நான் அதிகமாகப் பாராட்டுகிறேன். உங்களுக்குத் தெரியும், அது சகோதரன் டேவிட் லிட்டில்ஃபீல்டு என்று நான் யூகிக்கிறேன். அவர் எனக்கு அவ்வளவு ஒரு நெருங்கிய நண்பர். அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வருவது வழக்கம். அங்கே நாங்கள் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொண்டிருந்தோம். அவர் ஒரு புதிய சபையைக் கட்டியிருக்கிறார், சமீபத்தில் அதை கர்த்தருக்கென்று அர்பணிக்கக்கூடிய சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. 5எனவே, இந்த அருமையான ஆராதனையின் சூழ்நிலையில் இன்றைக்கு இங்கே இருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இந்த பட்டணத்தில் வந்ததிலிருந்து இந்த சபைகளின் மிகுதியான வருகையை நாங்கள் பாராட்டுகிறோம். மற்றும் மரிகோபா (Maricopa) பள்ளத்தாக்கு எங்கிலும் எங்களுக்கு அருமையான ஐக்கியம் உண்டாயிருந்தது. அன்றொரு நாள் இவ்விதமாகக் கூறினேன் என்று நான் நினைக்கிறேன்; அது, ஃபீனிக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ''வெறுமையான ஒன்றிலிருந்து வெளிவந்த ஒரு காரியம்' என்பதாகும்“, ஒருவேளை அது தவறான தெரிவித்தலாய் இருக்கலாம், ஆனால் ஏதோ ஒருவகையில் அது அவ்விதமாக இருக்கக்கூடும் - எப்படியெனில் இங்கிருக்கிற பாலைவனத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்ட பட்டணமாக இது இருக்கிறது, அது சரியாக ஒரு பாலைவனத்தின் மத்தியில் இருக்கிறது. எனவே அது ஒரு குழப்பத்தின் மத்தியிலிருந்து எழும்பனதைக் காண்பிக்கிறது. ஒருசில வருடங்களுக்கு முன்னர் நான் இந்த பட்டணத்திற்கு வந்திருக்கிறேன். அது பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருக்கும் அந்த சமயத்தில் சபைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிற நிலையில் இருந்தது உங்களால் அதை அரிதாகவே செய்ய... அவர்கள், “சரி, இந்த குழு ஒத்துழைப்பு செய்யுமானால், நாங்கள் வெளியேறிவிடுவோம்'', என்றார்கள்! பாருங்கள். ஆனால் இப்பொழுதோ சகோதரர்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு ஐக்கியத்தைக் கொண்ட சகோதரத்துவமும், சபைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஈடுபடக்கூடிய இன்னொரு ஃபீனிக்ஸ் மேலெழும்பி இருக்கிறதை நான் கண்டுபிடித்தேன். அநேக இடங்களில் ஒவ்வொரு இரவிலும்... இருப்பதை நான் கவனித்தேன். 6இப்பொழுது இங்கே இருக்கும் நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரன் மேல் வைக்கப்பட்ட கடமையாக இது இருக்கிறது, காரணம் இது ஞாயிறு காலையாக இருப்பதினால் அவர் இங்கே இருக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் ஞாயிறு காலையில் தங்களுடைய சபையில் ஒவ்வொரு நபரும் அவரவருடைய கடமையின் பணியில் இருக்கவேண்டும் என்று நாம் எப்பொழுதும் கூறியிருக்கிறோம். உங்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆராதனை இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், உங்கள் சொந்த சபை உங்களுடைய.... அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட தனிப்பொறுப்பாய் இருக்கிறது. அது தான் நீங்கள் தரித்திருக்கவேண்டிய இடமாக இருக்கிறது. அதை நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன். என்னுடைய வெளி ஊழியங்களில் அதை நான் வழக்கமாக ஞாயிறு பிற்பகலில் முடித்துவிடுவேன், அதினிமித்தம் ஞாயிற்று கிழமையில், பிற்பகல் ஆராதனையை... ஆகவே அதுதாமே வழக்கமான ஞாயிறு ஆராதனைகளைக் கொண்டிருக்கும் சபைகளை இடையூறு செய்யாது; அப்பொழுது தேசம் முழுவதும் இருக்கும் எல்லா பிரதிநிதிகளையும் வெவ்வேறு சபைகளுக்கு அனுப்பி ஒத்துழைப்பு கொடுக்க முடியும். அது எல்லோரும் ஒன்று சேர்ந்து ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. அதை நான் நேசிக்கிறேன். 7எனக்கு தெரிந்த மட்டும், முழு சுவிசேஷ வர்த்தக ஆராதனையில் என்னுடைய பாகத்தின் கடைசியை முடிக்கப் போவதற்கு முன்னதாக, இப்பொழுது இங்கே வந்து இந்த ஐக்கிய நேரத்தில் களிகூர்ந்து... எனவே தேவன் தாமே இன்றைய மதிய வேளையில் நம்மை அங்கே சந்தித்து, நமக்கு பயனுள்ள ஒரு காரியத்தை கொண்டு வருவார் என நாம் நம்புகிறோம் மற்றும் விசுவாசிக்கிறோம், காரணம் அந்த மக்கள் மத்தியில் - எபிஸ் கோபாலியர்கள், கத்தோலிக்கர்கள், லூத்தரன்கள், இன்னும் அநேகர் அமர்ந்திருக்கிறார்கள். மேலும் தேவன் தாமே ஏதோ ஒருவழியில் இங்கே அசைவாடி இன்னும் அநேகரை உள்ளே கொண்டு வருவார் என்று நாம் நம்புகிறோம். 8இப்பொழுது இதை நான் கூறவிரும்புகிறேன். உண்மையிலேயே இங்கே நிற்கும்போது, என் ஜீவியத்தில் என் வீட்டில் இருப்பது போல வேறு எங்குமே நான் உணர்ந்ததில்லை. எனவே... முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் ஐக்கியத்தில், அவர்கள் கூட்டத்திற்கு மற்ற சகோதரர்களை அழைத்து வருவதைப் பார்க்கும்போது, எபிஸ் கோபலியன், பிரஸ்பிடேரியன்... அநேகரைக் கொண்ட கிறிஸ்தவ சபைகளின் ஐக்கியத்தைப் போல காணப்படுகிறது. சபையினுடைய பசியை உங்களால் பார்க்க முடிகிறதா? மேலும் கிறிஸ்துவின் சபையார்? அவர்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த தேசம் எங்கிலும் தெய்வீக சுகமளித்தலின் பேரில் என்னுடன் தர்க்கம் பண்ணின இவர்கள் தாமே நேற்று இரவு டல்லாஸில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு ஒன்று கூடினார்கள். மற்றும் நீங்களும் அதில் அடங்குவீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் கவனியுங்கள். இருப்பினும் நம்முடைய ஐக்கியத்தையும், நம்முடைய ஒற்றுமையையும், தேவன் நம்முடன் இருப்பதையும் அவர்கள் கவனிக்கத் துவங்கினது முதல், அதற்கு விரோதமாக அவர்களால் ஒன்றும் பேச முடியாமற்போயிற்று என்பதை நான் விசுவாசிக்கிறேன்; காரணம் அது அவ்வாறு நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான், அது ஆச்சரியமாயிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 9எனவே இப்பொழுது ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் யாவருக்கும், இந்தச் சிறிய கூற்றைக் கூறவிரும்புகிறேன். இந்த மணி வேளையை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்களா? எனவே நல்ல புருஷர்களாகிய அப்படிப்பட்டவர்கள் மத்தியிலும் மற்றும் வெவ்வேறு சபைகளிலிருக்கும் மக்கள் மத்தியிலும் நீங்கள் செல்வீர்களானால், அதைக்குறித்ததான வகையறுத்தலைப் பிடித்துக் கொள்ளக்கூடாதபடிக்குப் போதுமான அளவு அவர்கள் ஆவிக்குரியவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள், பாருங்கள்! அவர்களால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. கர்த்தரிடத்தில் களிகூறுகிறோம் என்று அவர்கள் சிரிக்கவும், கர்த்தரைத் துதிக்கவும், மற்றும் சத்தமிட மட்டுமே விரும்புகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் சிரத்தை எடுத்து அது எங்கிருந்து வருகிறதென்று கண்டுபிடிப்பதென்பது, பாருங்கள்! சிரத்தை எடுத்துக்கொண்டு அது என்னவென்று உணர்ந்து கொள்வோமானால்... ஒவ்வொன்றும் தேவனுக்குள் ஒழுங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. அவர் நேரம் தவறாதவராயிருக்கிறார். 10ஒரு சமயம் “பதினொன்றாவது கட்டளை” அல்லது ''ஓர் மறக்கப்பட்ட உயரிய ஆசீர்வாதம்“ என்று அழைக்கப்பட்டதின் பேரில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். மத்தேயு 11ம் அதிகாரம், 6-ம் வசனத்தில் இப்படியாகக் கூறுகிறது, அது யோவான் தன்னுடைய சீஷர்களை அனுப்பி உண்மையிலேயே அவர் தான் மேசியாவா, இல்லையா என்று இயேசுவைக் கேட்கும்படிக்கு அனுப்பினான். ஆனால் இயேசுவோ யோவானுக்கு ஒரு புத்தகத்தையோ அல்லது சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றோ அல்லது சிறைச்சாலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றோ அல்லது இன்னும் வேறு எதையும் கொடுக்கவில்லை. அவர், ”நீங்கள் ஆராதனை முடியுமட்டும் தரித்திருந்து, அதன் பிறகு நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்“, என்று மட்டுமே கூறினார். பாருங்கள். 11எனவே, இந்த சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன், அவர்கள் வந்த வழியே குன்றைக் கடந்து திரும்பி தங்களுடைய இடத்திற்குச் சென்றவுடன், அவர் பேசத் துவங்கி, “எதைப் பார்க்க வனாந்திரத்திற்குச் சென்றீர்கள்? எதைப் பார்க்க சென்றீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அப்படிப்பட்டவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கச் சென்றீர்களா? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே”, என்றார். அவன் அவ்வளவாக அவருக்கு மிகக்குறைந்த மதிப்பீட்டைக் கொடுத்த பின்னும் கிட்டத்தட்ட இயேசுவைக் குறித்து ஒரு மோசமான காரியத்தை அவன் கூறியிருக்கக்கூடும்! அது, அவரை அவன் அறிமுகம் செய்து வைத்த பின்னரும் அவரைக்குறித்து சந்தேகப்பட்டதுதான்; இருப்பினும் அவர் யோவானைக் குறித்து புகழ்ந்து பேசினார்! இயேசு உடனடியாகத் திரும்பி, யோவான் உண்மையிலேயே எலியாவின் ஆவியை உடையவனென்று அறிந்திருந்து... இவ்விருவரும் எதிர்ப்புகளை எவ்வளவு கடினமாகத் தகர்த்தெறிய முடியுமோ! அவ்வளவாய்த் தகர்த்தெறிந்து கொண்டும், வெட்டி வீழ்த்திக் கொண்டும், எந்த ஒரு பின்விளைவுகளுக்கும் கவலைப்படாமல் தாங்கள் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச்சொல்லிக் கொண்டு முன் சென்றார்கள்! 12அதன் பிறகு என்ன நடந்தது என்று நீங்கள் கவனித்தீர்களா? அந்த யேசபேலுக்கு எதிரான எலியாவின் ஊழியத்திற்குப் பிறகு, உடனடியாக மக்கள் எல்லோரும் அவளைப் பின்பற்றி; மற்றும் ஒவ்வொரு... அங்கே அந்நாளில் எவ்வளவாக அவன் சுவிசேஷத்தை வல்லமையாகப் பிரசங்கித்து, மக்களுடைய எண்ணங்களை தகர்த்தெறிந்திருப்பான்! பின்பு கடைசியாக அவன் இந்த தேவனே தேவனென்று நிரூபித்தவுடன்; தான் தேவனென்று நிரூபனம் செய்யும்படிக்கு அவர் இறங்கி வந்தார்! பின்னர் அவன் நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டான். ஆகவே அவன் வெளியே புறப்பட்டுச் சென்று, ஒரு சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்து, மரித்துவிட வேண்டும் என்று எண்ணி, தன்னுடைய ஜீவனை எடுத்துக் கொள்ளும்படிக்குத் - தேவனிடத்தில் ஜெபித்தான். அங்கே வெளியே வனாந்திரத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலுமாக அவன் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். பின்னர் எங்கோ ஓரிடத்தில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டிருந்த அவனை தேவன் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தார். 13உங்களுக்குத் தெரியுமா யோவானும் அதே வழியில் வந்து...? கவனியுங்கள், அவன் எப்படி வந்தான் என்று! உள்ளதை உள்ளபடியும் மற்றும் வெட்டி வீழ்த்தும் பிரசங்கத்தைச் செய்து, ''உன்னுடைய சகோதரன் மனைவியை நீ வைத்திருப்பது நியாயமல்ல“, என்றான். அதினிமித்தம் கடைசியில் அவனுடைய தலை துண்டிக்கப்பட வேண்டியதாய் இருந்தது. தேவனை அவன் நிரூபித்துக் காண்பித்து; மற்றும், ”இவர்தான் மேசியா“ என்று அறிமுகம் செய்து வைத்த மாத்திரத்தில், அவனை அவர்கள் சிறையில் அடைத்துப் போட்டனர். நான் விசுவாசிக்கிறேன் அது... பெம்பர் மேனின் (Pemberman) ''ஆரம்ப காலங்கள்“ என்ற புத்தகத்தில்; அல்லது எழுத்தாளர்களில் ஒருவர் இப்படியாக கூறியிருக்கிறார். அது யோவான்... தீர்க்கதரிசிகள் எல்லோரும் கழுகுகளாயிருக்கிறார்கள் என்பது உண்மைதான், வெகுதூரத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு அங்கே அவர்கள் அதிக உயரம் போக வேண்டியதாய் இருக்கிறது. சிறையில் தன்னுடைய கழுகுக்கண் மேலாக மென்திரை மூடியிருக்கிறது என்றான். ஆனால் அது என்னவாயிருக்கிறது, உண்மையிலேயே அவன் எலியாவுக்கு அடையாளமாயிருக்கிறான், பாருங்கள்! அந்த அலைக்கழிப்பின் நிலைமையை அவன் கடந்துபோக வேண்டியதாயிருந்தது. 14எனவே இதைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். அதென்னவெனில் கடந்து சென்ற வருடங்களிலெல்லாம் இந்த ஊழியத்திற்காகவும், இந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காகவும், பெந்தகொஸ்தே ஆசீர்வாதங்களுக்காகவும், இன்னும் மற்ற காரியங்களுக்காகவும் போரிட்ட நாம், இப்பொழுது நம்முடைய சபையை நாம் நோக்கிப் பார்க்கும்போது, அநேகர் விழுந்து போவதை நாம் காண்கிறோம். அது நமக்குத் துக்கமாயிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்களா? இருப்பினும் இதற்கு மத்தியிலும், இங்கே நாம் பார்க்கும்போது, நாம் நம்முடையவைகளைப் பெற்றுக் கொள்வதை... உலக சபைகள் அமைப்பில் இணைவதையும் மற்றும் பிரஸ்பிடேரியன்களும், லூத்தரன்களும் தங்களை அதில் இணைத்துக் கொள்கிறார்களென்று நான் நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது அதை இன்னொரு கோணத்தில் திருப்பி; உங்களுக்கு ஆவிக்குரிய பகுத்தறிதல் இருக்குமானால், நாம் ஜீவிக்கும் மணிவேளையைக் கவனியுங்கள், அது நாம் இன்ன இடத்திற்கு வந்திருப்பதை காண்பிக்கிறது. உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள் தங்களுக்கு எண்ணெயைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு வந்து, அதை வாங்கும்படிக்கு வெளியே செல்கையில்; அப்பொழுது மணவாளன் வருகிற அந்த மணிவேளையில் தான் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், பாருங்கள்! 15மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும் இன்னும் அப்படிப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியைத் தேடுவதை நீங்கள் காண்பீர்களானால் நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உறங்கிக் கொண்டிருந்த (புத்தியில்லாத) கன்னிகைகள் புறப்பட்டு வந்து, “உங்களுடைய எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள்...'' என்று கூறினர்; அது இம்மணி வேளையாயிருக்கிறது. “நாங்கள் எங்கே பெற்றுக் கொண்டோமோ... எனவே நாங்கள் எப்படிப் பெற்றுக் கொண்டோமோ அதே வழியில் சென்று நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்”, என்று அவர்கள் கூறினர். எனவே அதைப்பெற்றுக் கொள்ளும்படிக்கு அவர்கள் சென்றபோது, சரியாக அந்த மணி வேளையில்தான் மணவாளன் வந்தார்; மணவாட்டியும் எடுத்துக் கொள்ளப்பட்டாள்; அவர்களோ அழுகையும் புலம்பலும், பற்கடிப்பும் உள்ள இடத்தில் கைவிடப்பட்டார்கள்! எந்த நேரத்திலும் நிகழக்கூடிய அவருடைய தோன்றுதலின் மிக நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளும்படிக்கு, என்னுடைய - பெந்தகொஸ்தே மக்களின் கண்கள் இப்படிப்பட்டவைகளுக்கு விழித்துக் கொள்ளுமா என்று நான் வியக்கிறேன்! அதைத் தவிர நிகழ்வதற்கென்று வேறொன்றுமில்லை. 16அங்கே எங்களுடைய சொந்த சபையில், சமீபத்தில் ஏழு சபைக் காலங்களையும் மற்றும் அதின் எல்லாக் காரியங்களையும் குறித்து நாங்கள் அலசி ஆராய்ந்தோம். மேலும், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் ஒவ்வொரு காலத்தையும் மற்றும் எப்படியாக அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு காலமாக பிரிந்து, லவோதிக்கேயா சபை காலத்தில் வந்து முடிவடைவதையும் நாங்கள் கவனித்தோம், பாருங்கள்! கிறிஸ்து தமது சபையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டு, வாசற்படியில் நின்று தன்னுடைய சொந்த சபைக்குள்ளே வருவதற்கு கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்; மற்றும் அதின் செய்தியின் முழுமையையும், அந்த நாளில் என்ன நிகழப்போவதென்பதையும், இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிற (புத்தியில்லாத) கன்னிகைகள் எவ்விதமாக நடந்து கொள்வார்கள் என்பதையும்; மற்றும் வெவ்வேறு காரியங்களையும் நாம் கவனிக்கும்போது! இன்னும் ஒவ்வொன்றும் சரியாக ஆயத்தமாயிருப்பதைப் பார்க்கும்போது! இப்பொழுதே எந்நேரத்திலும்... எடுத்துக் கொள்ளப்படுதல் எந்த நேரத்திலும் நடக்கலாம்! அது சரி. நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ... அவருடைய தோன்றுதலை நேசிக்கிற யாவரும்“. 17அன்றொரு நாள் யாரோ ஒருவர், சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் மக்களை பயமுறுத்துகிறீர்கள்“, என்றார். நான், “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்”, என்றேன். அவர், “ஆம், இயேசு எந்த நேரத்திலும் வரலாம்”, என்கிறீர்களே. நான், “நீங்கள் ஒரு கிறிஸ்தவர் தானே”, என்றேன். அவர், “ஆம், ஆனால் என்ன செய்யப்பட வேண்டிய வேலை அதிகமாக இருக்கிறதே”, என்றார். நான், “ஒரு நிமிடம் பொறுங்கள்”, என்றேன். நிகழப்போவதிலேயே அது மிகவும் பெரிதான நிகழ்வாக இருக்கும்! இயேசு கிறிஸ்துவின் தோன்றுதலை அறிந்துகொள்ள வரும்போது, மற்றெல்லாவற்றைக் காட்டிலும் இது என் இருதயத்தை பூரிப்படையச் செய்கிறதாயிருக்கிறது. அது சரிதான். ஏனென்றால், சாவுக்கேதுவானது சாவாமையைத் தரித்துக் கொள்ளும்; மற்றும் மூப்பு தன்னுடைய வல்லமையை இழந்து போகும். மேலும், நாமெல்லாரும் தேவ குமாரனுடைய சாயலில் மாற்றப்பட்டு, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்போம், பின்னர் நேரமும், வானமும் இல்லாமற் போகும். அதற்குப் பிறகு நித்தியம் மட்டுமே. ஆம், என்ன... என்னே ஒரு நபர் அவருடைய தோன்றுதலை நேசிக்கவில்லையென்றால் அவனிடத்தில் மனரீதியாக ஏதோ தவறு இருக்கிறது, அதென்னவெனில், உன்னுடைய ஆத்துமா சரியாயிருக்கும் பட்சத்தில், அதற்காக அது தவிக்கும்! 18ஒரு அன்பான, இனிமையான மனைவியை விட்டு அநேக வருடங்களுக்கு தூரமாயிருக்கும் ஒரு மனிதன்; எந்த நேரத்திலும் அவன் வருவான் என்று அவள் அறிந்திருக்கிறபடியால், அவன் வரும்போது அவள் அவனை சந்திப்பாள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவளுடைய முன் எதிர்பார்ப்புகள் எல்லாம் அவனைக் காணவேண்டும் என்பதிலேயே இருக்கும், பாருங்கள்! எந்தச் சமயத்திலும் அவன் வருவான் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். அல்லது தன்னுடைய ஆண் சிநேகிதன் வெளியே புறப்பட்டுச் சென்று நீண்ட நாட்களானதால் அவனுக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணை நினைத்துப் பாருங்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அவன் வந்ததும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதாய் இருந்தது. ஓ, என்னே அவள் எல்லாவற்றையும் ஆயத்தமாக வைத்திருந்தாள். என்னே, அவளுக்கு... ஏனெனில், அந்த பையன் வருவதைத் தவிர வேறெந்தக் காரியமும் இந்த உலகில் அவளுக்கு முக்கியமானதாகக் காணப்படவில்லை; அவளுக்கு எல்லாமே அவன் தான். ஆம், அவ்விதமாகத்தான் சபையும் இருக்கவேண்டும். ஆமாம், நாம் அவருடைய தோன்றுதலை (appearing) நேசிக்கிறவர்களாயிருக்க வேண்டும். சரியா? பவுலும், “எனக்காக ஒரு கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அதை அந்நாளிலே எனக்குத் தருவார்”, என்று கூறுகிறார். அவருக்கு மட்டுமல்ல, ஆனால் அவருடைய வருகையை நேசிக்கிற யாவருக்கும் அதைத் தந்தருள்வார். அதை நான் அதிகமாக நேசிக்கிறேன். 19நல்லது, இங்கே கவனியுங்கள், நான் ஒரு காரியம் என்னவெனில், நான் (பிரசங்கத்தை) துவங்குவதில் தாமதமாயிருக்கிறேன்; ஆனால் அதே சமயம் அதை முடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் யாவரும் கிருபையை விசுவாசிப்பதற்காகவும், என்னோடு பொறுமையாய் இருப்பதற்காகவும் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். இப்பொழுது இங்கே சபையாரோடு நாம் அதிக நேரம் எடுக்காமல் கொஞ்ச நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளப் போகிறோம். நான் உங்களிடத்தில் பேசுவேன் என்று வாக்குரைத்திருக்கிற காரியம் மட்டும் இல்லாதிருக்குமானால், மீதமுள்ள எல்லா நேரமும் இந்த சிறிய பாடற்குழு பாடுவதையும் மற்றும் சபையார் தங்கள் மத்தியில் நடக்கிற காரியங்களை தேவனுடைய மகிமைக்காகக் கூறும் சாட்சியையும் கேட்கவே நான் விரும்புகிறேன். ஓ, அது மிகவும் அற்புதமாக இருக்கும். அவ்விதமாக நிகழ்வதைப் பார்க்க; அதற்காக உடனே அங்கேயே அமர்ந்துவிடுவேன். உங்களுக்குத் தெரியும், ஊழியக்காரர்களாகிய நாங்கள் அநேக நேரங்களில், குறிப்பாக சுவிசேஷகர்கள், நாங்கள் எப்பொழுதும் சபைக்குச் சென்று தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டு, பிரசங்கித்துக் கொண்டு, பிரசங்கித்துக் கொண்டே தான் இருக்கிறோம். உங்களைப்போல் எங்களால் சபையில் உட்கார்ந்து, அதின் அக்கினியைக் கொண்டு எங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள முடிவதில்லை! உங்களுக்குத் தெரியும். வெறுமனே ஒன்றை எழுப்பி, உங்களுக்கு தெரியும், மற்றும்... 20அவர்கள் வலியுறுத்திக் கூறுவது போல, இப்பொழுது பெந்தகொஸ்து என்பது ஏதோ... அது அப்பொழுது இருந்த ஏதோ ஒரு காரியம் என்று அநேக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அநேக வருடங்களுக்கு முன்பாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, அவர்கள் ஒரு பெந்தகொஸ்தே அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அங்கே பரிசுத்த ஆவியானவர் மக்களை நிரப்ப, அதன்பின் அவர்கள் பெரிய காரியங்களைச் செய்தனர். சரி, இப்பொழுது, நீங்கள் வரையப்பட்ட அக்கினியைக் கொண்டு சூடேற்றிக் கொள்ள முடியாது. இல்லை! நீங்கள் உறைந்து போய் மரித்துப் போவீர்கள்! பாருங்கள். அது வெறுமனே ஒரு வரையப்பட்ட காரியமாயிருக்கிறது. அது உண்மையிலேயே இருந்த ஒரு காரியமாயிருக்கிறது. அப்பொழுது அவர்களோடு கூட தேவன் இருந்திருப்பாரானால், இன்றைக்கும் அதே விதமாக இருக்கமாட்டாரா? எனவே... எப்படியெனில் உங்களுடைய மஞ்சள் நிறமுள்ள பாடும் வகையைச் சேர்ந்த பறவைக்கு, நல்ல பெலமுள்ள இறக்கைகளையும் ஆரோக்கியமான எலும்புகளையும் மற்றும் அதிகமான இறகுகளையும் பெற்றுக்கொள்ளும்படிக்கு ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து, அதை ஒரு கூண்டில் அடைத்து வைத்து; அதை நீங்கள் பறக்கச் செய்யும்படிக்கு கொஞ்சம்கூட வெளியே விடாத பட்சத்தில், அதற்கு நீங்கள் ஆரோக்கியமான சிறகுகளைக் கொடுத்தும் அது எந்த ஒரு பிரயோஜனத்தையும் அதற்குச் செய்யாது. எனவே பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து, நம்மத்தியில் கிரியை செய்து, நமக்காக காரியத்தைச் செய்யும்படிக்கான ஒரு இடத்திற்கு நாமும் வர வேண்டியவர்களாய் இருக்கிறோம். 21இப்பொழுது ஒரு சில நிமிடத்துக்கு ஒரு வேத வசனத்தை நாம் படிப்போம்; பின்னர் கொஞ்ச நேரத்திற்கு உங்களிடத்தில் நான் பேசப்போகிறேன். அதன் பிறகு ஏறக்குறைய இரண்டு மணிக்கு... நாம் வீட்டிற்குச் சென்று, ஆகாரத்தைப் புசித்து, மறுபடியும் திரும்பி வருவோம். இம்மதிய வேளையில் வியாபார புருஷர்கள் கூட்டத்தில் பேசும்படி இரண்டு மணிக்கு நான் இருக்க வேண்டியதாயிருக்கிறது. 22இப்பொழுது நான் ஜெபிப்பதற்கு முன்னதாக நாம் தலைகளைத் தாழ்த்துவோமாக. பயபக்தியான இந்த வேளையில் நம்முடைய இருதயங்கள் மேலாக நமக்கு ஒரு பாரம் இருந்து, அதை தேவன் அறிந்து கொள்ளவேண்டும் என்று நாம் விரும்பும் பட்சத்தில்; மற்றும் அதற்காக நீங்கள் ஜெபத்தில் நினைவு கூறவேண்டும் என்று விரும்பும்போது, உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்த வேண்டும் என்று இந்த காலையில் நான் ஆவலாயிருக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லா வல்லமையும் கொண்ட சர்வ வல்லமையுள்ள தேவனும், முடிவில்லாத ஒருவரும், இருக்கிறவராக இருக்கும் மகத்தானவருமாகிய நீர் ஒரு உலகமோ, ஒரு அணுவோ, ஒரு மூலக்கூறோ தோன்றுவதற்கு முன்னமே நீர் நித்தியத்திலே வீற்றிருந்தீர். உம்மிடத்தில் வரும்படிக்கும் மற்றும் உம்மோடு கூட ஓர் நேர்காணலை பெற்றுக் கொள்ளும்படிக்கும் எங்களுக்கு வழியை வாய்க்கச் செய்ததற்காக இன்று நாங்கள் அவ்வளவாக உமக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில் உம்முடைய குமாரனும், எங்களுடைய இரட்சகருமாகிய, கர்த்தராகிய இயேசு, “என்னுடைய நாமத்தினால் நீங்கள் பிதாவிடம் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்,” என்று கூறியிருக்கிறார். எனவே, பிதாவே உம்மோடு கூட சிறிது நேரம் பேசும்படிக்கு, இயேசுவின் நாமத்தில், உம்மை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில், நாங்கள் உம்மை நேசிக்கிறபடியால் எங்களுடைய உணர்வுகளை உம்மிடத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் உம்மை நேசிக்கிறோம்; காரணம் நீர் எங்களை உண்மையிலேயே நேசித்தீர்; மேலும் நீர் எங்களை நேசிக்காதிருப்பீரானால் நாங்கள் இங்கே வந்திருக்க முடியாது. இங்கே நாங்கள் பெற்றிருக்கிற இந்த வழியில் நாங்கள் வந்தபோது, இந்த அன்பான பிதாவினிடத்தில் எங்களை திரும்பவும் மீட்டுக் கொள்ளும்படிக்கு இயேசு வந்தார். 23இந்த காலை வேளையில் நாங்கள் கேட்டுக் கொள்கிறது என்னவெனில் உம்முடைய இரத்தத்தின் பரிசுத்தமாக்கும் வல்லமையின் வெளிச்சத்தில், உமக்கு விரோதமாக நாங்கள் செய்த, சிந்தித்த அல்லது கூறின் எல்லா தீமையினின்றும் எங்களை சுத்தமாக்கும். பிதாவாகிய தேவனே, அப்படிப்பட்ட காரியங்கள் அநேகமாயிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். மகா பரிசுத்தமான தேவனாகிய உம்முடைய பார்வைக்கு தூதர்களும் அசுத்தமாயிருக்கும்போது, நாங்கள் எப்படி நிற்க முடியும்? ஆனால் இன்றைக்கு நாம் தூதர்களுக்கும் மேலான சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம், காரணம் தூதர்களுக்காக இயேசு மரிக்கவில்லை. தூதர்களோ பணிவிடைக்காரர்களாய் இருக்கிறார்கள், ஆனால் இயேசுவின் இரத்தத்தினால் நாம் அவருடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம். மேலும், நீர் எங்களுக்குச் செய்த காரியத்தினிமித்தமும்; மற்றும் நீர் எங்களுக்கு என்னவாக இருக்கிறீர் என்பதற்காகவும்; பிதாவே, உமக்கு நன்றி“, என்று கூறும்படிக்கு நாங்கள் உம்முடைய சமூகத்திற்கு வந்திருக்கிறோம். 24மேலும் ஒவ்வொரு கரத்திற்குப் பின்னாகவும் ஒரு பெரிய வாஞ்சை இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பிதாவே, அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளை நீர் அவர்களுக்கு அளித்திடும்படிக்கு, உம்மிடத்தில் நான் ஜெபிக்கிறேன். மேலும் இந்த இடத்திற்காகவும், இந்த சபைக்காகவும், மற்றும் கர்த்தராகிய இயேசுவின் சரீரமாகிய இந்த பாகத்தின் மேய்ப்பருக்காகவும், அதின் டீக்கன்மார்களுக்காகவும், தர்மகர்த்தாக்களுக்காகவும், இங்கே வந்திருக்கிற எல்லா அங்கத்தினர்களுக்காகவும், மற்றும் இந்த காலையில், இந்த கட்டிடத்தில் அதின் கூரையின் கீழாக கூடி வந்திருக்கிற எல்லா மக்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களை நீர் அபரிவிதமாகவும், அதற்கு மேலாகவும் ஆசீர்வதிக்கும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். இதுதாமே ஒரு ஜெபவீடாக இருக்கட்டும். இயேசு, “என்னுடைய பிதாவின் வீடு சகல ஜனங்களாலும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என்று எழுதியிருக்கிறதே”, என்றார். மேலும் இங்கிருந்து ஊழியக்காரர்கள் உலகத்திலுள்ள எல்லா பாகங்களுக்கும் புறப்பட்டுச் செல்வார்களாக. ஆகாரத்தைத் தேடும் தேனீக்கள் பட்டணத்தின் எல்லா பாகங்களிலுமிருந்து இங்கே வந்து தங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலையும், தங்களுடைய ஆத்துமாக்களுக்கு ஆகாரத்தையும் கண்டுபிடிக்கிற அளவுக்கு, இரக்கத்தின் பனித்துளிகள் அவ்வளவு நிஜமானதாக இங்கே இருக்கட்டும். இதை அளியும், கர்த்தாவே! கர்த்தாவே, நாங்கள் வாசிக்கப் போகிற இந்த சில வார்த்தைகளை ஆசீர்வதிக்கும்படிக்கு இப்பொழுது உம்மை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். மக்களுடைய இருதயங்களில் வித்துக்களை விதைக்கும்படிக்கும், மற்றும் அதுதாமே பெரிய மரங்களாக வளரும்படி அவர்களை பரிசுத்தம் செய்யும்படியும் உம்மிடத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். தேவனுடைய மகிமைக்காக இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 25ரோமர் 3-ம் அதிகாரம், 3-ம் வசனத்திலிருந்து இந்த வார்த்தைகளை நான் வாசிக்கட்டும். சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? இந்த காலையில் இதன்... அவிசுவாசம் தேவனை தடை செய்யாது என்பதைப்பற்றி ஒரு சில நிமிடங்களுக்கு நான் பேசப்போகிறேன். சிலர் நினைக்கலாம் அது அவ்விதமாகச் செய்யும் என்று, ஆனால் அது அவ்விதமாகச் செய்யாது. தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்; மற்றும் அவருடைய திட்டம்... யோவான் கூறினது போல, இந்த கல்லுகளைக் கொண்டு அவரால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண முடியும்“, என்றிருக்கிறது. அது சரிதான். அவருடைய திட்டமானது எவ்வித மாறுதலுமின்றி தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். 26ஏதேனைப்போல் அவ்வளவு பழமையானது பாவம். ஏதேனில், அங்குதான் அது பிறந்தது. பாவம் என்பது தேவன் என்ன கூறினாரோ அதை அவிசுவாசிப்பதாகும். இப்பொழுது, நீங்கள் கவனித்தீர்களா, எங்கே பாவம் பிறந்ததோ அங்கு தான் தேவனுடைய வார்த்தையும் அதிகமாக கவனிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் சாத்தான் ஏவாளிடத்தில்... அவள் கூறினது, “தேவன் கூறியிருக்கிறார்....” தேவன் “இன்ன இன்னதை” கூறியிருக்கிறார் என்பதை அவன் மறுதலிக்கவில்லை, ஆனால் அவன், “நிச்சயமாக தேவன் அவ்விதமான ஒரு காரியத்தைச் செய்யமாட்டார்”, என்றான். பாருங்கள், தேவனுடைய பரிபூரணமான வார்த்தையிலிருந்து இம்மியளவு மாறுபட்டிருக்கும்போது, அதுவே அவிசுவாசத்தின் பிறப்பாயிருக்கிறது. எங்கே? அல்லது என்ன? அல்லது எப்படி? என்பதைப் பொருட்படுத்தாமல், நாம் அதனோடு உறுதியாகத் தரித்திருக்க வேண்டும்; மற்றும் நம்முடைய ஜீவியமும், இன்னும் மற்றெல்லாமும் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதோடு கூட அளவிடப்பட்டு இருக்க வேண்டும். 27எனவே நாம் ஏதாவது வெளிப்பாட்டை பெற்றுக் கொள்வோமானால் நம்மிடத்தில் அது அளிக்கப்பட்டு, அதுதாமே எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கும் பட்சத்தில், அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது; காரணம் அதைத்தான் பிசாசு ஏவாளுக்குச் செய்தான். அவள் வார்த்தையைப் பெற்றிருந்தாள், ஆனால் அவள் ஏதோ ஒரு விதமான புதிய வெளிச்சத்தை தேடிக்கொண்டிருந்தாள். ஆகவே அதை அவள் பெற்றுக் கொள்ளும்படிக்கு சாத்தானும் கிரியை செய்தான். எனவே நாம் வார்த்தையோடு கூட எதையும் சேர்க்க விரும்பவில்லை, அல்லது வார்த்தையிலிருந்து எதையும் எடுத்துப் போட விரும்பவில்லை; ஆனால், அது. எவ்விதமாய் இருக்கிறதோ அவ்விதமே அது இருக்கட்டும். வார்த்தையோடு சரியாகத் தரித்திருங்கள், அதற்கு முரணானது எதுவுமே அவிசுவாசமாயிருக்கிறது. 28இப்பொழுது, நாம் அறிந்திருக்கிறோம் இந்த கடைசி நாட்களில்... அதை, நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்... சகோதரர்களும் ஊழியக்காரர்களுமாகிய நாம்... இருக்கிற நாம், நம்மால் முடிந்த மட்டும் எவ்வளவாக தேவனுக்கு நெருங்கி ஜீவிக்க முடியுமோ அவ்வளவாக நாம் முயல்வோம். காரணம் தேவனுடைய மந்தையை கண்காணிக்கும்படிக்கு நமக்கு ஒரு புனிதமான கடமை கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் பரிசுத்த ஆவியானவர்தாமே அதற்கு கண்காணியாக நம்மை வைத்திருக்கிறார். அவைகளை ஒழுங்கில் வைக்கும்படிக்கும், மற்றும் அவைகளுக்கு செம்மறியாட்டின் ஆகாரத்தை போஷிக்கும்படிக்கும், நாம் மந்தையை கண்காணிக்கிறோம். செம்மறியாடு வேதாகமத்திலிருந்து புசிக்கிறதாயிருக்கிறது. ஏனெனில் அவைகள் தேவனுடைய ஆட்டுக் குட்டிகளாயிருக்கிறது. இயேசு, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமின்றி, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”, சரியாக அந்த வார்த்தையிலேயே; என்று கூறியிருக்கிறார். 29பவுல் கலாத்தியர் 1:8ல் “ஏற்கனவே கொடுக்கப்பட்டதைத் தவிர்த்து வேறே சுவிசேஷத்தை உங்களுக்கு ஒரு தூதன் கொண்டு வந்தாலும், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்” என்று கூறியிருக்கிறான். பாருங்கள். நாம் தாமே வார்த்தையிலே சரியாக தரித்திருக்கும்படிக்கும், அதிலிருந்து விலகாதபடிக்கும், அந்த கட்டளையானது எவ்வளவு உறுதியாக கூறப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். ஒருவேளை தேவன் அதைக்கண்டு கொள்ளாமல் போகலாம் என்றெண்ணி, ஏவாள் அதிலிருந்து சிறிது விலகிச் சென்றிருக்கலாம். 30தேவன் நல்லவர் என்பதைப்பற்றி இன்றைக்கு நாம் அதிகமாகக் கேட்டு வருகிறோம். அது உண்மைதான். அவர் ஒரு நல்ல தேவன். அதை நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் அதே சமயத்தில் அவர் ஒரு நியாயத்தீர்ப்பின் தேவனாகவும் இருக்கிறார். அவர் நல்லவராக இருக்கவேண்டுமானால், அவர் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அவருடைய சட்டத்தை நிறைவேற்றவேண்டுமானால்.... இருந்தாக வேண்டும். சட்டமானது நிறைவேற்றப்படுவதற்கு தண்டனை என்ற ஒன்று இருந்தாக வேண்டும். இல்லையென்றால் சட்டமானது பிரயோஜனமற்றதாகிவிடும். ''நிறுத்தும் விளக்கை'' (சிக்னல்) மீறி செல்வது, சட்டத்துக்கு விரோதமானது என்று சட்டம் கூறியிருக்கும்போது, அதன்பின் அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான தண்டனை என்று ஒன்று இல்லாத பட்சத்தில், சட்டம் ஒரு பிரயோஜனமும்படாது. எனவே சட்டம் என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் நீங்கள் அத்துமீறிச் செல்லலாம்; அல்லது நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை மீறி ஒரு கோட்பாட்டிற்கோ அல்லது பாரம்பரியத்திற்கோ செல்வீர்களானால், நீங்கள் இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்கும் இடையே இருக்கிற கோட்டைத் தாண்டிச் சென்று விடுகிறீர்கள். அது சரிதான். நீங்கள் தேவனுடைய வார்த்தையில் மட்டுமே தரித்திருக்க வேண்டும், வார்த்தையோடு சரியாக தரித்திருப்பதை; அதை நான் நேசிக்கிறேன். வானமும் பூமியும் கூட ஒழிந்துபோய்விடும். ஆனால் என் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை. அதின் ஒரு இம்மியோ அல்லது ஒரு புள்ளியும் கூட ஒருபோதும் ஒழிந்து போவதில்லை. அது அவ்விதமாகத்தான் இருந்தாக வேண்டும். 31நாம் திரும்பிச் சென்று இங்கே எவ்வளவாக மணிக் கணக்கில் நேரத்தை எடுத்துக் கொண்டு, அடிப்படையைப் பற்றி... எப்படியாக அந்த - நமக்கு நேரமிருக்குமானால், எப்படியாக விஞ்ஞானமானது கடந்துபோன வருடங்களில் தங்களுக்கென்று ஒரு பெரிய பெயரை ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் சில சாதனைகளைச் செய்யப் போவதாய்க் கூறி தேவனுடைய உண்மையான எண்ணங்களை ஏளனம் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் அகழ்வாராய்ச்சி செய்யத் துவங்கி, தேவனுடைய வார்த்தையைப் பொய்யாக்க முயற்சிக்கும்போது, தேவன் உடனடியாக அவர்களை வேறெதையோ அகழ்வாராய்ச்சி செய்யும்படிக்குச் செய்து அதை நிரூபிக்கும்படிக்கு விட்டுவிட்டார். எனவே ஒருசில வருடங்களுக்கு முன் பெந்தகொஸ்தே சபை பிறந்தபோது; அவர்கள் “அது ஒரு மதவெறியர் கூட்டம். அது ஒருபோதும் நிலைக்காது”, என்றார்கள். ஆனால் அதுதாமே தேவனுடைய அசைவு என்று அவர்கள் அறியாமலிருந்தார்கள். தேவன் அதைச் செய்ய வேண்டியதாய் இருந்தது. அதுதாமே அதற்கான நேரமாய் இருந்தது. அது அதற்கான காலமாய் இருந்தது. 32கொஞ்ச நாட்களுக்கு முன், கூட்டங்களில் ஒன்றில், ஏதோ ஓரிடத்தில் நான் இவ்விதமாகக் கூறினேன், ஒருவேளை அது இந்த இடமாக இருக்கலாம், அது இயேசுதான் என்று அவ்வளவு நிச்சயமுடையவனாக யோவான் இருந்தான். மேசியாவின் அடையாளமாகிய அந்த புறா, தேவன் புறா வடிவத்தில் இறங்கி வருவதை அவன் காண்பதற்கு முன்னமே, பரிசுத்த ஆவியானவர் பரத்திலிருந்து வந்து, “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்று சத்தமானது கூறுவதை... அதைத்தான் அவன் பார்க்க வேண்டியவனாய் இருந்தான். “எவர் மேல் ஆவியானவர் இறங்கி வருகிறதைக் காண்கிறாயோ...” என்று பிதாவானவரும் அதை அவனுக்கு வனாந்திரத்தில் கூறியிருந்தார். இருப்பினும் யோவான் அவ்வளவு நிச்சயமுடையவனாய் இருக்க வேண்டியிருந்தது. அவர்கள் அவனிடத்தில், “நீர்தானே அந்த மேசியா? நீர்தானே வரவேண்டிய அந்த தீர்க்கதரிசி? நீர்தானே அது, இது?” என்று கேட்டார்கள். அவன், “நான் இல்லை”, என்றான். ஆனால், ''இப்பொழுது நம்மத்தியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்...“ என்றான். பாருங்கள், அந்த ஒருவர் மக்கள் மத்தியில் ஏற்கனவே வந்திருந்தபடியால், நேரமானது மிகவும் நெருங்கி வந்திருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான். காரணம் அவரை அவன் அறிமுகப்படுத்த வேண்டியவனாக இருந்தான் மற்றும் அவர் அங்கே இருக்கிறார் என்பதையும் அவன் அறிந்திருந்தான். 33அதைத்தான் ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான சபையானது இந்த கடைசி நாட்களில் செய்திருக்கிறதென்று விசுவாசிக்கிறேன். சபை மத்தியில் ஜீவனுள்ள தேவன் இருக்கிறார் என்ற அடையாளங்கண்டு கொள்ளப்படுதலை அதுதாமே மக்களுக்கு கொண்டு வருகிறதாய் இருக்கிறது. அதற்காகத்தான் அது எழுப்பப்பட்டிருக்கிறது. எனவே அந்த சபையானது திரும்பி வர வேண்டியதாய் இருக்கிறது; அது ரோமர்களின் சமயக் கோட்பாட்டிற்கோ அல்லது வேறெந்த ஒரு கோட்பாட்டிற்கோ அல்ல, ஆனால் அதுதாமே வேதாகமத்துக்கு திரும்பி வர வேண்டியதாய் இருக்கிறது. வேதாகமத்துக்கு திரும்பி வாருங்கள். அது என்னதான் கூறினாலும், வார்த்தை கூறினதை மட்டுமே செய்யுங்கள். நம்முடைய சொந்த எண்ணத்தை உபயோகிக்காமல்; வார்த்தையோடு கூட தரித்திருப்போம், காரணம் அது தேவனுடைய வாக்குத்தத்தமாய் இருக்கிறது. 34இப்பொழுது, அவிசுவாசமானது ஏதேனிலிருந்தே தொடர்ந்து வருகிற ஒரு பழமையான காரியம். அது மிகவும் தந்திரமாக கிட்டத்தட்ட சத்தியத்தைப் போலவே முதலில் வந்தது. இப்பொழுது, யாரோ ஒருவர் இவ்விதமாகக் கூறலாம், “சகோதரன் பிரான்ஹாம், இன்று காலை தேவசபைக்குச் சென்றார்”, உண்மைதான். அங்கு அவர் மேய்ப்பரைச் சந்தித்தார்“, சரிதான். அவர் அடர் நிற சூட்டும், டையும் அணிந்திருந்தார்”, ஆம், அது உண்மைதான். “அவர் மேய்ப்பரின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்தார்”, உண்மைதான். பின்னர் அவர் எழும்பி, பேசினார்“, சரிதான். எனவே அவையாவும், அதின் ஒவ்வொரு சின்னச்சின்ன காரியமும் உண்மைதான். ஆனால் அதினோடு கூட அவர்கள் இதையும் சேர்த்து, அதற்கு முன், அவர் கதவண்டை வந்தபோது, அங்கிருக்கும் அந்த கதவண்டை வந்தவுடன், ஒருபாட்டிலை வெளியே எடுத்து அதிலிருந்து கொஞ்சம் மதுபானம் குடித்தார்” என்று கூறுவார்கள். இப்பொழுது அங்குதான் காரியம் பொய்யாயிருக்கிறது. ஆனால் அந்த ஒரு சிறுகாரியம் முழு காரியத்தையும் குழப்பி அதை ஒரு பொய்யாக ஆக்கும் வரைக்கும், அதின் மற்ற எல்லா காரியங்களும் அவ்வளவு உண்மையாயிருக்கிறது, பாருங்கள், அதின் மற்ற காரியங்கள் எல்லாமே அவ்வளவு பரிபூரணமான உண்மையாயிருக்கிறது. 35ஆமாம், அவ்விதமாகத்தான் பிசாசும் செய்கிறான். அவன் நம்மை ஒவ்வொரு காரியத்திடம் கொண்டுவந்து, அதை அவ்வளவு தத்ரூபமாகக் காண்பித்து, மேலும் தொடர்ந்து சென்று, பெரும்பாலான தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப்போவான் (agree); ஆனால் அவன் எல்லா தேவனுடைய வார்த்தையையும் எடுத்துக் கொள்ள மாட்டான். நாமோ அதைத்தான் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவன், “புதிய பிறப்பு என்ற ஒரு காரியம் இருக்கிறது என்று நானும் விசுவாசிக்கிறேன்”, என்பான். ஆனால் நான் நினைப்பது என்னவெனில், அது ஒரு மனதின் மாற்றம் தான் என்பான். ஆனால் அது ஒரு மனதின் மாற்றம் அல்ல; அது ஒரு புதிய சிருஷ்டிப்பு. சபைக்கு ஒரு புதுப்பொலிவு அவசியமில்லை; அதற்கு ஒரு மனமாற்றமே அவசியமாயிருக்கிறது. அது ஒரு புதிய சிருஷ்டிப்பாய்த்தான் இருந்தாக வேண்டும். எனவே அவிசுவாசம் உங்களை ஒரு பக்கத்திற்கு தள்ளிவிடும். அனேகம் பேர், ''ஆம். எங்கள் இடத்திலும் நாங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறோம், ஆனால் நாங்கள் தேவனை விசுவாசிக்கும் போது நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக விசுவாசிக்கிறோம்“, என்பார்கள். இப்பொழுது, நீங்கள் கவனியுங்கள் அது எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதென்று? ஒருவேளை ஆறுநாட்கள் கழித்து சீஷர்கள் இவ்விதமாகக் கூறியிருப்பார்களென்றால், மத்தேயு அந்திரேயாவினிடத்தில், “உனக்கு இன்ன காரியம் தெரியுமா? நாம் ஏற்கனவே அதைப் பெற்றுக் கொண்டோம் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக் கொள்வோம்”, என்று கூறியிருப்பான். பாருங்கள். அது ஒருபோதும் நிகழ்ந்தே இருக்காது. பாருங்கள். அது வரும்போது அது எவ்விதமாக இருக்குமென்று ஒரே ஒரு வழியில்தான் அவர்கள் அறிந்திருந்தார்கள், அது வரும்போது, அது எவ்விதமாய் இருக்குமென்று நிரூபிப்பதற்கு அவர்கள் வேத வார்த்தையை பெற்றிருந்தார்கள். அது சரிதான். 36யோவேல், அது இவ்விதமாய் நிறைவேறும் (யோவேல் 2:28), கடைசி நாட்களில் இவ்விதமாய் நிறைவேறும் எப்படியெனில், ''நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; என்னுடைய ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் இன்னும் அப்படிப்பட்ட வைகளையும் காண்பிப்பேன்'', என்று கூறுகிறது. ஏசாயா 28:18-லிலும் (ஏசாயா 28:8ல் உள்ளது - தமிழாக்கியோன்) “இந்த கடைசி நாட்களில் இவ்விதமாய் நிறைவேறும்'' என்று கூறுகிறது. எப்படியெனில் மேஜை முழுவதும் வாந்தியினாலும், இன்னும் அப்படிப்பட்டவைகளினாலும் நிறைந்திருக்கும். ஆனாலும் வார்த்தையானது வரும், கற்பனையின் மேல் கற்பனையாகவும், பிரமாணத்தின் மேல் பிரமாணமாகவும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமாகவும் இருக்கும், எனவே நன்மையானது எதுவோ அதை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த மக்களோடே நான் பேசுவேன், மற்றும் இதுதான் இளைப்பாறுதல். நீங்கள் உள்ளே வந்து அநுசரிக்கக்கூடிய ஓய்வுநாள் இதுதான். இவையாவும் கூறப்பட்டிருந்தாலும் அதை அவர்கள் புரிந்துக் கொள்ளாமல், தங்கள் தலைகளை துலுக்கி, இன்னும் அவ்விதமான காரியங்களைச் செய்து, வெளியேறி சென்றுவிடுகிறார்கள். எனவே கவனியுங்கள், அந்த சீஷர்களோ, வார்த்தைக்கு பழக்கிவிக்கப்பட்டிருந்தார்கள். 37எனவே கடைசி நாட்களில் அவ்விதமாகத்தான் நிகழப்போகிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். (நான் தவறுதலாக எதையும் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன்). (ஒரு சகோதரன், “இல்லை” என்கிறார்) கடைசி நாட்களில், (வார்த்தையின்) நேர்கோட்டில் உறுதியாய் நிற்பதற்கு வேத வார்த்தையினால் பழக்குவிக்கப்பட்ட சபையினால் மாத்திரமே முடியும், ஏனெனில் மாம்சீக போலித்தன ஜீவியங்கள் எழும்பப் போகிறதாய் இருக்கிறது. யன்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல, தேவனுடைய வார்த்தையை எதிர்க்கிற இந்த கேடான சிந்தையைக் கொண்ட மக்களாகிய இவர்கள் இருப்பார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. இயேசுவே சத்தியமாக இருக்கிறார். “உம்முடைய வார்த்தையே சத்தியமாய் இருக்கிறது”, ஏனெனில், “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நம் மத்தியில் வாசம் செய்தது”. மற்றும், தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எந்த ஒரு காரியமும் அவ்வளவு உண்மையாகக் காணப்படும் அந்த நாளில் தான் நாம் இருக்கிறோம் என்று நாம் உணர்ந்து கொள்கிறோம்; இருப்பினும், அதுதாமே வேத வசனத்துக்குப் புறம்பாய் இருக்கும் பட்சத்தில், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதிலிருந்து நீங்கள் எவ்விதமான விளைவையோ, எப்படிப்பட்ட உணர்வையோ பெற்றுக் கொண்டாலும் அது காரியமில்லை, ஏனெனில் அதுதாமே வேத வசனத்தின்படி இராத பட்சத்தில் அதிலிருந்து விலகி இருங்கள். சரியாக வார்த்தையோடு தரித்திருங்கள். ஆம். 38சரி, நீங்கள், மக்களுக்கு அவிசுவாசத்தைக் கொண்டு வருகிறீர்கள்“, என்று கூறலாம். இல்லை, நான் அவர்களை விசுவாசிக்கவே முயற்சி செய்கிறேன். விசுவாசம் கேள்வியினாலே வருகிறதாயிருக்கிறது. கோட்பாட்டை (creed) கேட்பதால் வருகிறதா? ஒருவேளை விரிவுரைப் புத்தகத்தில் (Almanac) அப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அது வேதாகமம் இல்லை. தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால், அதுதான் விசுவாசத்தைக் கொண்டு வருகிறதாய் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் போது (hear), அது விசுவாசத்தைக் கொண்டு வருகிறதாய் இருக்கிறது. (இப்பொழுது இன்னும் பன்னிரெண்டு நிமிடங்கள் இருக்கிறது. இப்பொழுது, நான் மறுபடியும் மிகவும் தாமதமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன்) அவிசுவாசம் தேவனை அழிக்கமுடியாது, அது அவருடைய திட்டத்தை அழிக்கமுடியாது, அது அவருடைய கிரியைகளையும் அழிக்க முடியாது; அது அவிசுவாசியை மாத்திரமே அழிக்கும். அவிசுவாசம் அவிசுவாசியை மாத்திரமே அழிக்கிறதாயிருக்கிறது. 39கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் என்னிடத்தில் (அவர் ஒரு குறிப்பிட்ட அருமையான ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்), “மேய்ப்பரே, தெய்வீக சுகமளித்தல் மூலமாக ஒரு சுகமளித்தலை (அது என்னுடைய ஒளிபரப்புக்கு சற்று முன்னர் நடந்தது), ஒரு சுகமளித்தலைக் கொண்டு வருவோருக்கு நாங்கள் ஆயிரம் டாலர் பணம் ரொக்கமாகத் தருவோம். அதை நாங்கள் அப்பொழுதே கொடுத்துவிடுவோம்”, என்றார். அவரைப் பின்தொடர்ந்து ஆர்கன்சாலிலுள்ள, ஜோன்ஸ்பரோவுக்கு நான் வருகிறேன் என்று அவருக்குத் தெரியும். அதன்பின்பு நான் என்னுடைய ஒளிபரப்பு வேலைக்காக சென்றுவிட்டேன். எனவே ஒளிபரப்பு முடிந்த உடனே, நான் பட்டணத்திற்குச் சென்று ஒரு வைத்தியன்... அவரிடத்தில் கழுத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனைக் கொண்டு வந்தேன். எனவே அவனுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அது அவனுடைய கழுத்திலிருந்து கீழே விழுந்து, தரையில் உருண்டோடியது. அதை செய்தித்தாள்களும் பிரசுரித்தன. 40எனவே அவருக்கு நண்பரான அந்த மருத்துவரிடத்தில் நான் விசாரித்தேன். நான், மருத்துவரே... “அவரிடத்தில் நான் அநேக முறை பேசியிருக்கிறேன். அது நிகழ்ந்ததற்கு பிறகு ஏற்பட்ட இன்னொரு சந்திப்பு இது. எனவே நான், உங்களுக்கு அந்த சம்பவம் நினைவிருக்கிறதா?”, என்றேன். அவர், “நன்றாக நினைவிருக்கிறது”, என்றார். “வேறெந்த மருத்துவ விஞ்ஞானமோ அல்லது வேறெதாவது இதைச் செய்திருக்கும் என்று உங்களால் கூறமுடியுமா?”, என்றேன். அவர், இல்லை, ஐயா, என்னால் கூற முடியாது, என்றார். “அப்படியானால் இதை ஏதோ ஓர் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று அதைச் செய்திருக்க வேண்டும்”, என்றேன். அவர்,“அது சரிதான்'', என்றார். நான், “நீங்கள் இதற்காக என்னோடு செலவிடும் நேரத்திற்கான தொகையை நான் செலுத்திவிடுகிறேன். நான் சென்று மிஷனரி ஊழியத்திற்காக அந்த ஆயிரம் டாலரை வாங்கிக் கொள்ளப் போகிறேன்”, என்றேன். ஆனால் நான் அந்த மேய்ப்பரின் தியான அறைக்குச் சென்றவுடன், இதுவரைக்கும் அவர் என்னைப் பார்த்தது கிடையாது, அவர் கூறினது... நான், “எவராவது தெய்வீக சுகமளித்தல் நடந்ததற்கான நிரூபனத்தை கொண்டு வந்தால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் கொடுப்பதாகக் கூறின உங்கள் ஒலிபரப்பை நான் கேட்டிருக்கிறேன்'', என்றேன். அவர், “சரி” என்றார். நான், ''நீங்கள் விரும்புவீர்களானால், அந்த காசோலையை என்னிடத்தில் கொடுக்கலாம்“, என்றேன். நான், ”இதோ அந்த மனிதன்; இதோ அவருடைய மருத்துவர்“, என்றேன். அதற்குப்பின் நான் கண்டுபிடித்தது என்னவெனில் அந்த ஆயிரம் டாலர் டெக்ஸாஸில் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது என்றும் மேலும் காரியமானது ஏதோ அவ்விதமாக (சாக்குபோக்காக)இருந்தது. 41அவர், ''நீங்கள்... நான் பார்க்கட்டும். நான் சென்று ஒரு சிறு பெண்ணை இங்கே அழைத்துவந்து, அவளுடைய கரத்தை நான் துண்டிக்கட்டும். பின்னர் நீங்கள் அதை சுகப்படுத்துவதை நான் பார்க்கட்டும். அதன் பின்னர் நான் விசுவாசிப்பேன்“, என்றார். நான், “நீங்கள் மனரீதியான சுகத்தை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது”, என்றேன். நிச்சயமாக. யாராவது ஒரு குழந்தையின் கையைத் துண்டிப்பார்களா! “நீ தேவனுடைய குமாரனாயிருந்தால், இங்கே எங்களுக்கு முன்பாக ஒரு அற்புதத்தை செய்துகாட்டும். இந்த கல்லுகள் அப்பமாக மாற்றப்படுவதை நாங்கள் பார்க்கட்டும்”, என்று கூறின அதே பழைய பிசாசுதான் இது. பாருங்கள் “நீ தேவனுடைய குமாரனாயிருந்தால், சிலுவையை விட்டு கீழே வாரும். அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம்”. அவர் அதை செய்திருக்கக் கூடும். ஆனால் அவரோ பிசாசுக்கு செவிகொடுக்கவில்லை. அவர், “பிதாவானவர் எனக்கு காண்பிக்கும் வரை நான் வேறொன்றையும் செய்வதில்லை”, என்றார். பாருங்கள். அது சரிதான், “அவர் எனக்கு என்ன செய்ய சொல்லுகிறாரோ அதையே நான் செய்வேன்”. எனவே கவனியுங்கள், இவ்விதமான விளைவுகள் உங்கள் மேல் வந்து, இது, அது மற்றும் வேறுவிதமான காரியங்களைக் கூற முயற்சிக்கும்போது, அதை நீங்கள் ஒருபோதும் விசுவாசிக்க வேண்டாம். தேவனுடைய வார்த்தை ... நான் அவருடைய முற்றத்தைவிட்டு வெளியேரும்போது, இந்த ஊழியக்காரர் என்னிடத்தில் கூறியது என்னவெனில், இம்மாதிரியான காரியங்களை எவ்வளவுதான் நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தாலும், அதைப்பற்றி எனக்கு அக்கரை இல்லை, நான் அதை விசுவாசிக்கப் போவதே இல்லை“, என்றார். நான் உண்மையிலேயே, உங்களால் முடியாது, “ஏனெனில் நீங்கள் ஒரு அவிசுவாசி. அது அவிசுவாசிகளுக்கு அனுப்பப்படவில்லை, ஐயா. அது விசுவாசிகளுக்கு மாத்திரமே அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமே அதை என்றென்றைக்கும் புரிந்துகொள்ள முடியும்”. 42“...கொஞ்ச காலத்திற்கு உலகம் என்னைக் காணாது (அது அவிசுவாசிகளுக்கும்); ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள்...'' ஏனெனில், உலகத்தின் முடிவு பரியந்தமும், அதாவது காலத்தின் முடிவு வரைக்கும், உங்களுடனே கூட நான் இருப்பேன். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் ஜீவிக்கும் பட்சத்தில், அவர் அதே காரியத்தை உற்பத்தி செய்யமாட்டாரா? எனவே அது உங்களுக்குள்ளாக ஜீவிக்கும்போது, அவர் ஜீவிக்கும்போது செய்த அதே காரியத்தை அவருடைய ஜீவன் உற்பத்தி செய்யாதா? 43எனவே அது அவிசுவாசியை மட்டுமே அழிக்கிறதாயிருக்கிறது. அது அவ்விதமே நோவாவின் நாட்களில் செய்தது. நீதியை பிரசங்கிக்கிறவராயிருந்த நோவா தேவனுடைய வார்த்தையைக் கேட்டதும், தன்னுடைய வீட்டாரை இரட்சித்துக் கொள்ளும்படிக்கு பேழையை ஆயத்தம் பண்ணினார். எனவே அவர் பேழையை ஆயத்தம் பண்ணினபோது, அவர் செய்தது என்ன? அவர் - அவிசுவாசிகளுக்கு பிரசங்கம் செய்தார். அப்பொழுது நோவா அவிசுவாசிகளுக்கு ஒரு விமர்சனத்திற்குரிய தீவிரவாதியாகக் காணப்பட்டார். ஆனால் அவர்களுடைய அவிசுவாசம் ஒரே ஒரு காரியத்தைத்தான் செய்தது, அது பூமியின் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தது. அந்த அவிசுவாசிகளை அழித்த அதே நியாயத்தீர்ப்பு நோவாவை இரட்சிக்கும் படிக்கான வழியாயிருந்தது. அவிசுவாசியை அழித்துப்போட்ட அந்த நியாயத்தீர்ப்பின் ஜலப்பிரளையமே நோவாவின் பேழையை மிதக்கச் செய்தது. ஆமென். எனவே அது அவிசுவாசியை உண்மையிலேயே அழித்துப் போடுகிறது. அதற்கு தேவனோடு செய்வதற்கான எந்த ஒரு காரியமும் இல்லை. அது அவரை நிறுத்த முடியாது. அவர் எப்பொழுதும் போல ஒரே விதமாக போய்க் கொண்டிருப்பார். ஆம், ஐயா. 44இப்பொழுது, விசுவாசம் தேவனுக்கும் மற்றும் அதை பெற்றிருக்கிற நபருக்கும் தவிர மற்ற எல்லாருக்கும் விசுவாசம் ஏளனமான காரியமாய் இருக்கும். ஆனால் அது தேவனுக்கு ஏளனமானதாய் இருக்காது, ஏனெனில் அவரே விசுவாசத்தின் ஆக்கியோனாய் இருக்கிறார். மற்றும் விசுவாசத்தைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு அது ஏளனமாய் தோன்றாது. காரணம் அவன் தேவனை விசுவாசிக்கிறவனாய் இருக்கிறான். எனவே அது அவனுக்கு ஏளனமாய் இருக்காது. தேவனே அதின் ஆக்கியோனாக இருக்கிறார். அவரே அதை சிருஷ்டித்தார். மனிதனோ அதை தேவனிடத்திலிருந்து பெற்றவனாய் இருக்கிறான்; உண்மையிலேயே அது தேவனுக்கு ஏளனமாய் இருக்காது. காரணம் அதை அவர் சிருஷ்டித்ததினால் அது என்னவென்று அவருக்குத்தெரியும். 45ஆனால் அதைப் பெற்றுக் கொள்கிற அந்த விசுவாசிக்கு அது ஏளனமானதாக இருக்காது காரணம் அதுதாமே நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின், சுவைக்க முடியாதவைகளின், உணரமுடியாதவைகளின், நுகர முடியாதவைகளின் அல்லது கேள்விப்படாதவைகளின் உறுதியாய் இருக்கிறது. ஆனால் அவனுக்குத் தெரியும் அது அங்கே இருக்கிறது என்று. அது அவனுக்கு ஏளனமானதாக இருக்காது. காரணம் அது செய்து முடிக்கப்பட்டதற்கு சமானமாய் இருக்கிறது. அதைக்குறித்து அவன் கொஞ்சங்கூட கவலைப்படத் தேவையில்லை. அதை தேவன் கூறியிருக்கிறார் என்றும் மற்றும் தேவன் அதை சொல்லியிருக்கிறார் என்றும் அவனுக்குத் தெரியும், அதுபோதும் அவனுக்கு. சரிதான். எனவே நாம் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும். தேவன் நாம் விசுவாசத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே அவிசுவாசம் அவருடைய திட்டங்களை அழித்து போடமுடியாது. அது அவைகளுக்கு எதிராக ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அது அதேவிதமாக தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் தங்களுடைய அவிசுவாசத்தை எடுத்து சூரியனை நிறுத்த முடியுமா என்று நான் பார்க்க விரும்புகிறேன். என்ன... உங்களுடைய விசுவாசத்தை எடுத்து என்று கூறுகிறீர்களா? ஓ, ஆமாம். அதுதான் அவ்விதமாய் செய்தது. யோசுவா அவ்விதமாய் செய்தான், விசுவாசம் அதை செய்யும் ஆனால் உங்களுடைய அவிசுவாசம் உங்களை எங்கேயும் கொண்டு செல்லாது. இல்லை. 46ஒரு மேகம் மேல் எழும்பி வருகிறதை நீங்கள் பார்க்கிறீர்கள் மற்றும் கவனியுங்கள் உங்கள் அவிசுவாசம்... அது மழை பொழியப் போவதில்லை... கவனியுங்கள், அது அவ்விதமே மழை வராமல் போய்விடும். சரி, “நீங்கள் கூறலாம், அது ஏதாவது நன்மையை எனக்குச் செய்யுமா?” ஓ, ஆமாம், விசுவாசம் அதைச் செய்யும். பாருங்கள், அவிசுவாசம், அதற்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை. 47நீங்கள் இரண்டு அடிப்படைக் கூறுகளால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள்: ஒன்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும் அல்லது நீங்கள் விசுவாசிக்காமலிருக்க வேண்டும். இப்பொழுது அவிசுவாசத்தை எடுத்து, அது என்ன செய்கிறது என்று பார்க்கலாம். அது கவலையை மட்டுமே உண்டுபண்ணி, தாங்கொண்ணாத் துன்ப நிலையைக் கொண்டு வந்து; மேலும், அது உங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாது, அவிசுவாசத்தினால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நாளை காலையில் சூரிய உதயத்தின்போது நீங்கள் சுடப்படப் போவதாக வைத்துக் கொள்வோம். மற்றும் அதைக்குறித்து கவலைப்படுவதினால் அது உங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாது. ஒரு துளி கூட உதவி செய்யாது. அது உங்கள் மேல் இன்னும் மோசமானதைத்தான் கொண்டுவரும். எனவே நீங்கள் அதைச் செய்யக் கூடாது. அப்படி செய்வது நல்லதல்ல. “சரி”, நீங்கள் கூறலாம், “விசுவாசம் என்ன செய்யப் போகிறது?” “தேவனுடைய வார்த்தை என்ன செய்யப் போகிறது?”. அது விசுவாசத்தை சிருஷ்டிக்கிறது, “சரி, நீங்கள் நாளை காலையில் சுடப்படப் போவதாக இருக்கும் பட்சத்தில், விசுவாசம் என்ன செய்யும்?” அது என்னை விடுவிக்கும், அவ்விதமாக அநேகமுறை எனக்கு அது செய்திருக்கிறது, நிச்சயமாக, பாருங்கள். அவிசுவாசத்தில் எந்த ஒரு பலனும் இல்லை. இருக்கின்ற எல்லா பலனும் விசுவாசத்தில் தான் இருக்கிறது, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, தேவனை அவருடைய வார்த்தையின்படி எடுத்துக் கொள்வதில்தான். 48இப்பொழுது, இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன், அது அவர்கள் சுதந்திர தேவி சிலையைக் கண்டனம் செய்வதற்கு முன், அது ஐக்கிய அமெரிக்க தேசத்திற்கு பிரான்ஸிலிருந்து வந்த ஒரு வெகுமதியாக... இப்பொழுது, அது கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது, எனவே அதற்குள்ளாக மேல் ஏறி செல்லமுடியாது என்று எனக்குப் புரியும். ஒருமுறை அதற்குள்ளாகப் போகிற சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த சிலையின் மேற்பாகமான கை பாகத்திற்குள் சென்றேன். அதன் பிறகு நானும் வழிகாட்டியும் அங்கே இருந்த ஒரு சிறிய இடத்திற்குச் சென்றோம், அங்கே ஒரு ஜன்னல் இருந்தது, அங்கே நான் வெளியே தொலைவாகப் பார்த்தபடி, என்னுடைய அத்தை பையன் அங்கே இராணுவத்தில் முழுவதும் அடிப்பட்டு மற்றும் சுடப்பட்டவனாய் பின்னர் அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்ததை நினைவு கூர்ந்தேன். அவன், எனவே எங்கள் கப்பல் கரையை நோக்கி வந்தபோது, பில்லி, நாங்கள் தொலைதூரத்தில் நம் தேசத்தை கண்டவுடன், அவர்கள் (நாங்கள்) சந்தோஷத்தில் சக்கர நாற்காலிகளை உருட்டிக் கொண்டும், தூக்குப்படுக்கையின் (stretcher cases) பெட்டிகளை மேலே உயர்த்தவும் செய்தோம், என்றான். அது முதலாம் உலகப்போர் நடந்தபோது நிகழ்ந்தது. அது, நியூயார்க் பட்டிணத்தில் பெரிய மிகப் பெரிய கட்டிடங்கள், வருவதற்கு முன்னதாக நடந்தது, எனவே அந்த சுதந்திர தேவி சிலை கடலிலிருந்து மேல் எழும்புவதை அவர்களால் காண முடிந்தது. அப்பொழுது அவர்கள், “என் தேசமே, உம்மண்டைக்கு, இனிய சுதந்திர தேசமே...” என்று பாட துவங்கினார்கள். வெட்டுக் காயம்பட்டு, மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டும், முடமான அந்த தேர்ச்சி பெற்ற யுத்தத்தை முடித்து திரும்பும் படை வீரர்கள், அந்த சுதந்திர தேவி சிலை அவ்விதமாக கடலிலிருந்து மேல் எழும்புவதை கண்டபோது, அவர்கள் உடனடியாகக் கீழே பணிந்து, கூச்சலிடத் துவங்கினார்கள் என்று கூறுகிறார்கள். ஏன்? ஏனெனில் அதன் பின்னாக அவர்களுடைய தாயார் காத்துக் கொண்டிருந்தார்கள், காதலிகள் காத்துக் கொண்டிருந்தனர், மனைவிமார்கள் காத்துக் கொண்டிருந்தனர், குழந்தைகள் காத்துக் கொண்டிருந்தனர். ''ஒரு இராணுவ வீரனுக்கு, யுத்தக்களத்திலிருந்து வெட்டுக் காயம்பட்டு, திரும்பும் வீரனுக்கு அது அவ்விதமாக செய்யுமானால்; அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் அந்த பழைய கோர சிலுவையைக் காணும் நமக்கு அது எப்படியிருக்கும்?“ என்று நான் நினைத்தேன். ஓ, எனக்கு அந்த பழைய சீயோன் கப்பலின் மேல் தளத்தில் நின்று என் கைகளை உயர்த்தி, ''ஆச்சரியமான கிருபை, அதின் சத்தம் எவ்வளவு இனிமையானது'' அல்லது ”ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன்“ என்று கூற விரும்புகிறேன். 49அவ்விதமாக அந்த ஜன்னல் வழியாக நான் பார்த்துக் கொண்டு, சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அங்கே ஓரமாக ஒரு கூட்ட சிறிய சிட்டுக் குருவிகள் மரித்துக் கிடப்பதை கவனித்தேன். அவைகள் அப்பொழுது தான் கொல்லப்பட்டது போல காணப்பட்டது. எனவே நான் அந்த வழிகாட்டியினிடத்தில் கேட்டேன், அந்த சிட்டுக் குருவிகளை நீங்கள் விஷம் வைத்து கொன்றீர்களா?“ என்று கேட்டேன். அவன், “இல்லை, இல்லை, நாங்கள் அதற்கு விஷம் வைக்கவில்லை'', என்றான். நான், “அப்படியானால் ஏன் இவைகள் இங்கே இந்த ஜன்னலண்டை மரித்துக் கிடக்கின்றன?”, என்றேன். அவன், “அவைகள் தங்களுடைய மூளை வெளியேறும் அளவுக்கு ஜன்னலில் மோதி இறந்து கிடக்கின்றன”, என்றான். எனவே நான், “ஏன் அவ்விதமாக நடந்தது,” என்றேன். அவன், “கடந்த இரவுக்கு முந்தின இரவில் ஒரு புயல் வீசியது. அப்பொழுது புயல் வீசிக்கொண்டும், காற்று சுழன்று அடித்துக் கொண்டும், மரங்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்து கொண்டும், மின்னல்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தபோது, இந்த சிறிய பறவைகள் தஞ்சம் அடையும்படிக்கு இந்த (கோபுர) வழிகாட்டி விளக்கண்டை வந்தது”, என்றான். அவன் தொடர்ந்து, “ஆனால் அவைகள் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பைக் கண்டுபிடித்திருக்குமானால், அவைகள் பாதுகாப்பாக இருந்திருக்கும். ஆனால் அவைகள் எப்படி முயற்சி செய்தது என்றால் அவைகள் தொடர்ந்து பறந்தபடி, அந்த விளக்கை மோதி அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அது அவைகளைக் குருடாக்கித்தான் போட்டது. அதினிமித்தம் அவைகள் தங்களுடைய சிறிய மூளைகள் சிதறடிக்கப்பட்டு, இங்கே மரித்துக் கிடக்கின்றன. 50அப்பொழுது உடனே நான் எதையும் கூறவில்லை. ஆனால், நான், ''அது எவ்வளவு உண்மையானது என்று நினைத்தேன். அவிசுவாசிகள், இந்த வழிகாட்டி (கோபுர) விளக்கண்டை (தேவனுடைய வார்த்தையே வெளிச்சமாய் இருக்கிறது) வந்து அந்த வழிகாட்டி விளக்கை எடுத்துக் கொண்டு அதினோடு கூட பாதுகாப்பாக கிறிஸ்துவுக்குள் வருவதற்குப் பதிலாக, தங்களுடைய மூளைகளைச் சிதறடிக்கும்படி செய்கிறார்கள், எப்படியெனில் அந்த விளக்கானது முற்றிலும் அணைத்துப் போட முடியாததாய் இருக்கும்போது, அதை அணைத்துப் போட முயன்று பாவத்திலும், இழிவானதிலும் மரித்துப் போகிறார்கள். ஆனால் அந்த வெளிச்சத்தையோ இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அணைத்துப் போடும்படிக்கு எவ்வளவு தான் நாத்திகவாதிகள் எழும்பினாலும், எவ்வளவு தான் பாதாளத்திலிருந்து பிசாசுகள் வந்தாலும், அது கூடாததாயிருக்கிறது''. “நானே உலகத்தின் வெளிச்சமாயிருக்கிறேன்”, அவர்களால் அதை ஒருக்காலும் அணைத்துப்போட முடியாது. எனவே செய்வதற்கென்று ஒரே ஒரு காரியம் தான் இருக்கிறது. அது உன்னுடைய பாதையில் பிரகாசிக்கும்போது, அதைப் பின்பற்று. “கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடி, சுகமாயிருப்பான். நீங்கள் என்னிலும் (கோபுரத்திற்குள்) என்னுடைய வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், அப்பொழுது நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது உங்களுக்குக் கொடுக்கப்படும்”. 51அநேகமுறை நான் நோக்கிப் பார்க்கப்படுகிறேன்... இப்பொழுது நான்... நான் இதை என்னுடைய கூடாரத்தில் இருப்பதாக நினைத்துக் கூறுகிறேன். நான் என்னுடைய கூடாரத்தைத் தவிர வேறெங்கும் என்னுடைய வீட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்ததில்லை. “சகோதரன் பிரான்ஹாம், எப்படி இப்பேற்பட்ட காரியங்கள் நடக்கின்றன? இதை நடப்பிக்கச் செய்கிறது எது? மற்றும் எப்படி இது நடக்கிறது? என்று மக்கள் கேட்பார்கள். அது அவருடைய வார்த்தையை விசுவாசித்து, இயேசுவில் நிலைத்திருந்தால் போதும். அவர் அதை செய்வதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், எனவே அவர் அதைச் செய்து முடிப்பார். (இப்பொழுது நான் துரிதமாக முடிக்கவேண்டும்) 52சரி, இயேசு... இந்த உலகத்திற்கு வந்தார். இன்னும் ஒரே ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். இதைக் குறித்து ஐம்பது வசனங்களை நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன், எனவே... (ஆனால் நான் ஒரு சில வசனங்களையே தேர்ந்தெடுத்திருக்கிறேன், எனவே என்னால் இங்கே கவனித்துப் பார்த்து, அதைக் குறிப்பிட விரும்புகிறேன்). 53எனவே இயேசுவானவர், அவர் இந்த உலகத்திற்கு வந்தபோது, அதிகப்படியான அவிசுவாசம் நிறைந்த நேரத்தில் அவர் வந்தார். அது சரிதான். அவிசுவாசியை இன்னும் அதிகமாக அவிசுவாசிக்கச் செய்யும்படிக்கான விதத்தில் அவர் வந்தார். தேவன் கட்டுக்குள்ளாக் காரியத்தை அவர் அவ்வளவு ஒரு அருமையான பிதா! சரியான நேரத்தில் அவரைக் கொண்டு வந்து, அவருக்கு... கொடுத்தார். அவர், தகாதவிதத்தில் பிறந்த குழந்தை என்று மக்கள் நினைத்தார்கள். அதினிமித்தம் அவரை எந்த ஒரு பள்ளிக் கூடத்துக்கும், இன்னும் அது போன்ற எந்த ஒன்றுக்கும் அவரை அனுப்பவில்லை. அவர் ஒரு வித்தியாசமான பையனாக இருந்தார். ஆனாலும் அவரைக் குறித்து ஏதோ காரியம் விசேஷமாய் காணப்பட்டது. “அதென்னவெனில் அவர் என்ன கூறினாரோ அது சத்தியமாய் இருந்தது. அவர் என்ன பேசினாரோ, அது அவ்விதமே நிகழ்ந்தது”. 54அவர் அதற்கான புகழை தனக்குத்தானே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தேவனோடு தன்னை இணைத்துக் கொண்டு, “இந்த கிரியைகளைச் செய்வது நான் அல்ல, என்றார். அவர், ”தேவன் உங்களுடைய பிதாவாயிருக்கிறார் என்று நீங்கள் உரிமை கோருகிறீர்கள் மற்றும் அவரை எங்கள் பிதா என்றும் கூறுகிறீர்கள், அப்படியிருக்கும் போது நீங்கள் என்னை விசுவாசியாமலிருப்பது எப்படி? நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லையென்றால், நான் செய்கிற கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அவைகளே என்னை நம்பச் செய்கிற சான்றுகளாய் இருக்கின்றன. அவைகளே என்னைக் குறித்து சாட்சி பகர்வதாயிருக்கிறது. இது சத்தியமா அல்லது இல்லையா என்று பேசுகிறதும் அவைகளே. மேசியா என்ன செய்கிறவராயிருப்பார் என்று வேத வசனங்களைப் படித்துப் பாருங்கள். வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் அவைகளில் நீங்கள் நினைக்கிறபடி உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு, மற்றும் என்னைப்பற்றி அவை சாட்சியும் கொடுக்கின்றன“, என்றார். எனவே அவர் தாமே ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். வேத வசனங்கள், அவைகளே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறது. 55அவிசுவாசம் அவரை நிறுத்த முடியவில்லை. அவர் தொடர்ந்து முன்னேறிப் போய்க் கொண்டிருந்தார். அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோடே எழுப்பி, குஷ்டரோகிகளை சுத்தமாக்கி, தொடர்ந்து முன்னே போய்க் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும் என்று விசுவாசியாமல் இருந்தபோது..... அவர்களுடைய அவிசுவாசம் இயேசுவை ஒருபோதும் நிறுத்த முடியவில்லை. அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்தபடி தொடர்ந்து முன்னே போய்க் கொண்டிருந்தார். அது ஒரு துளிகூட அவரைத் தொல்லைப்படுத்தவில்லை. இப்பொழுது அவிசுவாசிகள் இருந்தாக வேண்டும். தேவன் அதை முன் உரைத்திருக்கிறார். எனவே அது ஒரு விசுவாசிக்கு பத்து அவிசுவாசிகள் என்ற விகிதத்தில் இருப்பார்கள். அதற்கு மேலும் இருக்கலாம், ஆயிரத்துக்கு ஒன்று என்ற விகிதத்திலும் இருக்கலாம், காரணம் சபையானது எண்ணிக்கையில் சிறுபாண்மையாக இருக்கும். சிறு மந்தையே பயப்படாதே, உமக்கு இராஜ்ஜியத்தை கொடுக்க வேண்டும் என்பது உம்முடைய பிதாவின் பிரியமான சித்தமாயிருக்கிறது. எனவே மிகவும் பெரிதான ஒன்றை எதிர்பார்த்திருக்க வேண்டாம். பிசாசு எப்பொழுதும் ஒரு பெரிதான ஒன்றை நோக்கியே செல்வான், ஆனால் தேவனோ தன்னை எளிமையாக (சிறுமையாக) வைத்துக் கொள்கிறார். யெகோவா தேவன் அங்கே தொழுவத்தில் ஒரு குழந்தையாக கிடத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். யெகோவா ஒரு இளமையான பையனாக விளையாடிக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர் தேவனாக இருந்தார். தேவன் அவருக்குள் இருந்தார். அது சரியே. அவர் தேவனை வெளிப்படுத்தும்படிக்கு வந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து உலகத்தை தனக்குத்தானே ஒப்புரவாக்கிக் கொண்டிருந்தார். 56எனவே இதை நாம் கவனிப்போம்... அது பெரிய அளவில் நடத்தப்படும் ஒரு கூட்டம் என்று அழைக்கும் அளவுக்கு காய்பா பெரிய கூட்டத்தை சேர்ந்திருக்கலாம். சில சமயம் இது போன்ற ஒரு சாதாரண சிறிய சபையைக் கொண்டிருக்கும் மேய்ப்பர்களுக்கு, சில சமயம் இவ்விதமான எண்ணம் தோன்றலாம். எப்படியெனில், “நான் பில்லி கிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ், இன்னும் அது போன்றவர்கள் அளவுக்கு இல்லாததினால், ஒருவேளை தேவன் என்னை நேசிக்காமல் இருக்கலாம்'', என்று கவனியுங்கள், அதை நீங்கள் ஒருபோதும் விசுவாசிக்க வேண்டாம். நான் பெற்றுக் கொண்ட மிகவும் வல்லமையான கூட்டங்களில், மிகவும் சிறிய சபைகளிலும், சில சமயம் எங்கோ ஒரு வீட்டில் ஏழு அல்லது எட்டு பேராக நாங்கள் கூடி ஜெபித்துக் கொண்டிருந்தபோது, நடந்தது பாருங்கள், தேவன் கூடிவரும்படிக்கு வாக்குத்தத்தம்... சபை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அது காரியமல்ல, அவர் நம்மோடு கூட இருப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். “எங்கே என் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் கூடுகிறார்களோ, அவர்கள் மத்தியில் இருப்பேன் என்று. 57சரி, அதை நிறுத்துவது என்பது, இதை நான் கூறட்டும்: அவிசுவாசம் தேவனை நிறுத்த முடியாது, அவருடைய திட்டத்தையும் நிறுத்திப்போட முடியாது, அவருடைய அசைவையும் நிறுத்திப்போட முடியாது, அவிசுவாசியைத் தவிர வேறொன்றையும் அதினால் நிறுத்திபோட முடியாது. அது அவனை அவனுடைய பாவத்தில் நிறுத்திப்போடும், அங்கே அவன் நின்றபடி தன்னைத்தானே நோக்கிக் கொண்டிருப்பான், ஏனெனில் அதுதான் அவனுடைய நிலை. இன்றைக்கு அவர்கள், பரிசுத்த ஆவி என்ற ஒரு காரியமே இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் அது இதை நிறுத்திப்போட முடியாது. மக்களோ இன்னும் தொடர்ந்து சென்று அதை உண்மையிலே பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். தெய்வீக சுகமளித்தல் என்ற ஒரு காரியமே இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் மக்களோ (அவர்கள்) தொடர்ந்து சென்று சுகத்தை உண்மையிலேயே பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். சந்தோஷம் என்ற ஒரு காரியமே இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்; மக்களோ தொடர்ந்து சென்று சந்தோஷத்தினால் கூச்சலிட்டபடி போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள். “இந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்ற ஒரு காரியம் இல்லவே இல்லை என்று பெந்தெகொஸ்தவர்களாகிய நீங்கள் பேசிக் கொள்கிறீர்கள்”, ஆனால் மக்களோ அதினால் ஒவ்வொரு நாளும் நிரப்பப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதைக் குறித்து அவர்களால் விவரித்துக் கூறமுடியாமல் இருக்கலாம்; ஆனால் அதை பெற்றிருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியும் அதுதான் முக்கியமான காரியம். எனவே அவிசுவாசம் தேவனை நிறுத்த முடியாது. நாம் அதை பெற்றிருக்கிறோம் என்று நாம் அறிந்திருக்கிறோம். அதை பெற்றிருக்கிற மக்களோடு என்னை இணைத்துக் கொள்வதில் நான் சந்தோஷப்படுகிறேன். 58நாம் ஜெபம் செய்வோம். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எங்கள் பரலோகப் பிதாவே, தேவனை எவ்வழியிலும் விவரிக்க (explain) முடியாது என்பதை அறிந்து கொள்ளும்போது இக்காலையில் நாங்கள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம், விஞ்ஞான வழியிலும் நாங்கள் தேவனைக் கீழே கொண்டு வரமுடியாது. மோசேவும், அவை (இலைகள்) எரிந்து போகாமல் இருப்பதற்கு அந்த இலைகளின் மேல் எப்படிப்பட்ட தெளிப்பான் (spray) தெளிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கும்படிக்கு அம்மரத்திலிருந்து இலைகளைப் பறித்து ஆய்வுக் கூடத்திற்குக் கொண்டு செல்லவில்லை. அதை அவன் முயற்சி கூட செய்யவில்லை. அவன் உடனே கீழே உட்கார்ந்து, அதனுடன் பேசினான். 59ஓ, தேவனே, ஃபீனிக்ஸில் இருக்கும் இந்த ஏழை, எளிய ஆத்துமாக்களைப் பார்ப்பதற்கு, செல்வதற்கென்று எந்த ஒரு இடமும் இல்லாமலும்; மற்றும் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இந்த தெருக்களில் மேலும் கீழுமாக திரிந்து கொண்டும்; தெளிவாக கூறுவோமானால் இந்த தெருக்களில் மேலும் கீழுமாக நடந்துக் கொண்டிருக்கும் இவர்கள்; இந்தக் கூடாரத்திலிருந்து உம்முடைய சத்தத்தை கேட்கும்படிக்குச் செய்யும், மேலும் இந்த பட்டணத்திலிருக்கும் மற்றவர்களும் இந்த மக்களின் மேலாக இருக்கும் அக்கினியைப் பார்க்கட்டும், மற்றும் அதைப் பெற்றுக் கொண்ட பிறகு இந்த மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கட்டும். அவர்களுடைய ஜீவியங்கள் எரிகிற ஓர் முட்புதராய் இருக்கிறது. 60மேலும் இவை யாவற்றையும் குறித்து விஞ்ஞானரீதியாக அறியும்படிக்கு அவர்கள் முயலவேண்டாம்; ஆனால் அவர்கள் இந்த சிறிய ஆலயத்திற்குள்ளாக வந்து, உட்கார்ந்து, அதனுடன் பேசட்டும். “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” என்று அவர் கூறினதை அறிந்து கொண்ட மோசேயைப் போல இவர்களும் அறிந்து கொள்வார்களென்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். நான் துவக்கமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் இருக்கிறேன். அவர் என்றென்றைக்கும் இருந்தவரும் மற்றும் என்றென்றைக்கும் இருக்கிறவராக இருக்கிறார். 61தேவனே, உம்மிடத்தில் நாங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறோம், மற்றும் நீர் எங்கள் விசுவாசத்தை உயர்த்தும்படிக்கும்; தேவனுடைய மகத்தான கிருபை எங்களோடு கூட தொடர்ந்து இருக்கும்படிக்கும்; நாங்கள் ஜெபிக்கிறோம். இந்தக் காலையில் இங்கிருக்கும் இந்த மக்களை ஆசீர்வதியும். மேலும் அவர்கள் தாமே ஜீவிக்கிற நிருபங்களாகவும்; எல்லா மனுஷராலும் வாசிக்கப்படுகிறதும் மற்றும் தேவனுடைய வார்த்தையானது அவர்களுடைய இருதயங்களிலும், ஜீவியங்களிலும் ஜீவிக்கும்படிக்கு தேவனுடைய எல்லா மகத்தான வல்லமைகளும் அவர்களுடைய ஜீவியத்தில் கட்டவிழ்த்து விடப்படுகிற அளவுக்கு; இங்கிருக்கும் விசுவாசி(களை)யை பரிசுத்தப்படுத்தும். இங்கிருக்கும் எங்கள் கனிவான மற்றும் அன்பான சகோதரனாகிய மேய்ப்பரை ஆசீர்வதியும். தேவனே, நீர் அவருடைய இருதயத்தின் வாஞ்சையை அவருக்கும், அவருடைய அன்பானவர்களுக்கும், மற்றும் அவருடைய சபைக்கும் அளிக்கும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். இதை அளியும், கர்த்தாவே! 62எங்களுடைய குறைகளை எங்களுக்கு மன்னித்து, நிகழப்போகிற ஆவியின் நிரப்புதலுக்காக எங்களுடைய ஆத்துமாக்களை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் அது சீக்கிரத்தில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்; காரணம் எதிராளியானவன் வெள்ளம் போல் வர இருக்கிறான், ...அவர்கள் எழும்புவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், அதற்கு விரோதமாக தேவனுடைய ஆவியானவர் ஒரு தடையை எழுப்புவார். இந்த கடைசி நாட்களில்... நாம் எதிர்நோக்குகிறோம். நாங்கள் விளக்கிக் கூறினதுபோல, புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய்க்காக கூக்குரலிடும் போது, அப்பொழுது நேரம் சமீபமாயிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். எனவே, தேவனே இப்பொழுது நாங்கள் எங்களை ஆராய்ந்து பார்த்துக் கொள்கிறோம். எப்படியெனில் நாங்கள் விசுவாசிகள் தானா? முழு வார்த்தையையும் நாங்கள் விசுவாசிக்கிறோமா? இருளில் நாங்கள் வெளிச்சத்தைக் கொடுக்கும்படிக்கு எங்கள் விளக்கை எண்ணெயினால் முழுவதும் நிரப்பும். 63இந்த பிற்பகலில் இங்கே இந்த வியாபார புருஷர்களின் ஐக்கிய கூட்டத்தில் கூடி வந்திருக்கிறவர்களை ஆசீர்வதியும். இந்த பிற்பகலில் அநேக ஆத்துமாக்களை நீர் இரட்சிக்கும்படிக்கு, நான் ஜெபிக்கிறேன். இங்கே இந்த இரவில் இந்த சிறிய தேவாலயத்தில் கூடி வந்திருக்கும் மக்களிடத்திலும், மற்றும் இந்த பட்டணத்தில் வெவ்வேறு இடங்களில் மக்கள் கூடுகிற இடத்திலும் நீர் திரும்ப வரும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். இதை அளியும் பிதாவே. மேலும் என்றோ ஒரு நாள் நாங்கள் நம்புகிறோம் நாங்கள்... இந்தக் காலை வேளையில் கூறப்பட்ட இந்த வார்த்தைகளும் மற்றும் இந்த ஒலிநாடாவும் தேவனுடைய பரந்து விரிந்த வானத்தில் எங்கோ ஒலிக்கும்போது, நாமெல்லாரும் இயேசு நமக்கு செய்த நன்மையை மட்டுமே நம்பினவர்களாய்; நாமெல்லாரும் கறை, திறை இல்லாதவர்களாய் அங்கே இருப்போம். இதை அளியும், அவருடைய நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 64தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் இந்த ஆராதனையை மேய்ப்பரிடத்தில் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் ஒரு காரியத்தை எனக்குச் செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது 12 மணி ஆகிறது மற்றும் நாம் கூட்டத்தை முடித்துப் போக வேண்டிய நேரமாகிவிட்டது என்று நான் அறிவேன். இன்னும் வேறெதோ காரியத்தை அவர் செய்யவோ அல்லது கூறவோ விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். அடுத்து நிகழப்போகிற இன்னொரு கூட்டத்திற்கு ஆயத்தமாவதற்கு நான் கிளம்புவதற்கு முன், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்திட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 65இந்த சிறிய பாடற்குழு... ஐயா, சுத்தமும், தூய்மையுமான, அருமையாய் காணப்படும் இந்த பாடற்குழுவிற்காக நான் உங்களைப் பாராட்ட விரும்புகிறேன். ஒருவேளை நீங்கள் என்னை ஒரு பைத்தியம் என்று நினைக்கலாம், ஆனால் நான் அவ்விதமாய் இருந்தாலும், நான் இன்னும் வார்த்தையில் சரியாகத்தான் இருக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன்“ என்ற பாடலை நாமெல்லோரும் பாடுவோம். பியானோ வாசிக்கின்ற சகோதரியே, நீங்கள் அங்கே செல்வீர்களா? ”நான் அவரை நேசிக்கிறேன்“, என்ற பாடல். ”நான் அவரை நேசிக்கிறேன்“ ஏனெனில் அவர் என்னை முதலில் நேசித்தார். நான் அதை அவ்வளவாய் நேசிக்கிறேன். நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? 66நான் ஒரு கென்டக்கியன். இங்கே கென்டக்கியர்கள் யாராவது இருக்கிறீர்களா? நல்லது, உங்களுடைய இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. அரிசோனா தொடர்ந்து முன்னே போய்க் கொண்டிருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமுமில்லை. ஓ, அருமை. சகோதரன். எட் ஹப்பர், நான் பார்த்திருக்கிறேன் என்று நினைத்தேன். ஓ, நீங்கள் கென்டக்கியிலிருந்து கொஞ்சத் தொலைவில் இருக்கிறீர்கள். நீங்களும் கூட கென்டக்கியன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் எனக்கு நினைவு தெரிந்த வகையில் நீங்கள் கலிபோர்னியாவை சுற்றியிருக்கிற ஏதோ ஒரு இடத்திலிருந்து வருகிறீர்கள். 67சரி, இப்பொழுது ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து, இப்பொழுது எல்லோருமாக சேர்ந்து, கிளை ஆற்றின் கீழ் நாம் எப்பொழுதும் பாடுகிறவிதம், உங்களுக்கு தெரியும், ஓடை பிரியும் இடத்தில், இப்பொழுது ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும் இப்பொழுது. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என்னை முதலில் நேசித்து; கல்வாரி மரத்தின் மேல் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார். 68அது அருமையாக இல்லையா? ஒரு வயதான பிரசங்கியார் வழக்கமாக என்னை பார்க்க வருவதுண்டு. அவர் கொஞ்ச நேரம் பிரசங்கிப்பார், பின்னர் என்னிடத்தில் ஓடி வந்து என் கரத்தைப்பிடித்து “தேவனுக்கு மகிமை உண்டாவதாக”, என்று கூறுவார், பின்னர் மேலே ஓடி இன்னும் கொஞ்சம் பிரசங்கிப்பார். அவர்தான் வயதான ரயன். ஒரு நாள் நான் அவரிடத்தில், “சகோதரன் ரயன், நான் உங்களிடத்தில் ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஏன் நீங்கள் எப்பொழுதும் என்னிடத்தில் ஓடி வந்து, என்னுடைய கரங்களைக் குலுக்கிச் செல்கிறீர்கள்''? என்றேன். அதற்கு அவர், “என் பேட்டரியில் ஆற்றல் சக்தி குறைந்துவிடும், அப்பொழுது எனக்கு கொஞ்சம் ஆற்றல் தேவைப்படும்”, என்றார். எனவே இந்த மதிய வேளையில் இது எனக்கு ஆற்றலை அதிகரிக்கிறது, பாருங்கள். எனவே நம்முடைய கரங்களை நாம் உயர்த்தி நாம் தொடர்ந்து பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என்னை முந்தி நேசித்தார்; கல்வாரி மரத்தின் மேல் (சரி, சகோதர மேய்ப்பரே) என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார். 69கைகுலுக்குதலை எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? அதை நீங்கள் விரும்புகிறீர்களா? நான் ஒரு பாப்டிஸ்டாக இருந்தேன், ஆனால்... நான் ஒரு கைகுலுக்கும் பாப்டிஸ்டாக இருந்தேன், ஆனால் அது அங்கிருந்து ஒருபோதும் வரவில்லை. நான் ஒரு உற்சாகமான கைகுலுக்குதலை விரும்புகிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன் (இந்த காலையில் என்னுடைய மனைவி என்னுடன் இல்லை, மற்றும் சகோதரி. சாத்மன் இதை நீங்கள் அவளிடத்தில் கூற நான் விரும்பவில்லை) நான் அவளுடன் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தேன், உங்களுக்குத் தெரியும், நான் இந்த உற்சாகமான பழைய பாணியிலான கைகுலுக்குதலை விரும்புகிறேனென்று. நான் கடைத்தெருவுக்குப் போய்க் கொண்டிருந்தேன், அப்பொழுது ஒரு சீமாட்டி, “ஹலோ, சகோதரி பிரான்ஹாம்”, என்றார். என் மனைவி பிரதியுத்தரம் கூறினதை என்னால் கேட்கமுடியவில்லை. எனவே நான், “தேனே, அந்த சீமாட்டி உன்னுடன் பேசினாள்,” என்றேன். அவள், “நான் அவளுக்கு பிரதியுத்தரம் பண்ணினேன்”, என்றாள். “சரி, நான், ”நிச்சயம் அது அவளுக்கு காதில் கேட்டிருக்காது. நான் உனக்கு இவ்வளவு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன், ஆனாலும் அது எனக்கு காதில் கேட்கவில்லை,“ என்றேன். அவள், “ஓ, நான் சிரித்தேன்”, என்றாள். நான், “ஆனால், அது வெறுமென ஒரு குழந்தைத்தனமான அசட்டுச் சிரிப்பு, என்றேன். நான் ஒரு உண்மையான கைகுலுக்குதலை விரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா? நீங்கள் அதை விரும்பவில்லையா? 70சில நாட்களுக்கு முன், வெகு தொலைவில், (மேய்ப்பரே, இது விரும்பத்தகாததாயிருக்கும், என்னை நீங்கள் மன்னியுங்கள்) வெகு தொலைவில்... நான் இருந்தபோது.... ஃபுளோரிடாவுக்கு சென்றிருந்தேன். நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம், கிட்டத்தட்ட கூடுகிற அளவுக்கு அங்கே ஒரு கூடாரம் எங்களுக்கு இருந்தது. ஓ, அங்கே சுகத்திற்காக மக்கள் பல ஆயிரக்கணக்கில் கூடி வந்திருந்தனர். சுகமளிக்கும் ஆராதனைகளில் எப்படியாக மக்கள் தள்ளிக் கொண்டும் நெளிந்து கொண்டும் இருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அப்பொழுது அங்கேயிருந்த சகோதரர்களில் ஒருவர் என்னிடத்தில் வந்து, “இவ்விடத்தின் சீமாட்டி உங்களை பார்க்க விரும்புகிறார்கள்”, என்றார். நான், “என்னது?” அந்த சகோதரன் எதைக் குறித்துப் பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை . அவர், “சீமாட்டி”, என்றார். நான், “டச்சஸ்”, என்றால் என்ன?“. நான், ”அது அவர்கள் கூறுவதுபோல இங்கே எங்கோ மறைந்திருக்கும் ஒரு செழிப்பான தங்கச் சுரங்கம், ஒரு தங்கச் சுரங்கமாய் இருக்கலாம் என்று நான் நினைத்தேன். மறைந்து போன ஒரு தங்க சுரங்கத்தைப் போன்றது என்றும் உங்களுக்கும் அது தெரியும். எனவே, நான், “நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை, என்றேன். அவர், ''என்னது! இங்கிருக்கும் இந்த எல்லா சொத்துகளுக்கெல்லாம் இந்த பெண்தான் சொந்தக்காரர்“, என்றார். நான், “நல்லது, கவனியுங்கள், வெளியே கிட்டத்தட்ட ஐயாயிரம் வியாதியஸ்த மக்களும் உள்ளே வரும்படிக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களே”, என்றேன். அவரோ, “ஓ, ஆனால் அவர்கள் சீமாட்டியாச்சே. இவர்களை நீங்கள் சந்தித்துதான் ஆகவேண்டும்”, என்றார். நான், “இங்கிருக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அவள் ஒன்றும் பெரியவரல்ல, அப்படியில்லையா? கவனியுங்கள், அவளும் ஒரு மனுஷிதான்”, என்றேன். எனவே, அவர், இங்கிருக்கும் கூடாரம் வழியாக நீங்கள் வெளியே செல்லும்போது, அங்கே அவர் இருப்பார்“, என்றார். 71நான் அவளை நோக்கிப் பார்த்தேன். அவள் என்னிடத்தில் வந்தாள். இப்பொழுது தயவு செய்து இதை நீங்கள் அவபக்தியானது என்று நீங்கள் நினைக்கவேண்டாம். இது அவ்விதமாய் இருக்கும் என்று நம்பவில்லை. அவள் கைப்பிடி கொண்ட கண்கண்ணாடி அணிந்திருந்தாள். எனவே வெளியே பார்ப்பதற்கு, எந்த ஒரு கைப்பிடி வழியாகவும் நீங்கள் பார்க்கப் போவதில்லை என்று உங்களுக்கு தெரியும். இவ்விதமாக, அவளுடைய கண்ணாடி கைப்பிடியுடன் பொருத்தப்பட்டிருந்தது. அவள், “ஓ, நீங்கள் தான் டாக்டர். பிரான்ஹாமா?” என்றாள். நான், “இல்லை, அம்மையாரே. இல்லை, இல்லை. நான் சகோதரன் பிரான்ஹாம்”, என்றேன். அவள், அது எனக்கு பிடித்திருக்கிறது“, என்றாள். அவள் தன்னுடைய கரத்தை அப்படியாக வெளியே நீட்டியிருந்தாள், அதிலே ஒரு டஜன் மிஷனரிமார்களை உலகத்தைச் சுற்றிலும் பத்துமுறை அனுப்பத்தக்க போதுமான தங்கத்தை அணிந்திருந்தாள். அவள் தன்னுடைய கரத்தை இப்படியாக மேலே நீட்டியிருந்தாள். இப்பொழுது, அப்படியிருக்கும் பட்சத்தில் கைகுலுக்குவதற்கென்று வழியே இல்லை. நான் என் கரத்தை மேலே உயர்த்தி, அவளுடைய பெரிய பருமனான கரத்தை பற்றிப் பிடித்துக் கொண்டேன். நான், ''அதை இங்கே கீழே கொண்டு வாருங்கள், அப்பொழுது நான் உங்களை மறுபடியும் சந்திக்கும்போது உங்களை தெரிந்து கொள்ளமுடியும்“, என்றேன். நல்ல ஒரு பழங்கால கைகுலுக்குதலை நான் விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? நாம் மறுபடியும் நான் அவரை நேசிக்கிறேன்” என்று பாடும்போது ஒருவருக்கொருவர் நாம் அதைக் (கை)கொடுத்துக் கொள்வோம். இப்பொழுது ஒவ்வொருவரும். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என்னை முந்தி நேசித்தார்; (அது சரி) கல்வாரியின் சிலுவையில் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார். மறுபடியும் நான் உங்களைப் பார்க்குமட்டும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை அவருக்கு நேராக உயர்த்துவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் முந்தி......